இலங்கையில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்- உரிமையை நீக்கிய அரசு

இலங்கை

ஐசிஐசிஐ வங்கி இலங்கையில் கடந்த 2006-ம் ஆண்டு முதன்முறையாகக் கால் பதித்தது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கையில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் மூடப்பட உள்ளன.

  இலங்கையில் அந்நாட்டு வங்கி விதிமுறைகளின் அடிப்படையில் சராசரி கடன் விகிதத்தைக் குறைக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. இதையேற்று அனைத்து வங்கிகளும் அந்த உத்தரவை அமல்படுத்தின.

  ஆனால், ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ ஆகிய இரண்டு வங்கிகளும் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதனால் இந்த இரண்டு வங்கிகளுக்குமான அனுமதியை ரத்து செய்வதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இரண்டு வங்கிகளின் தாய் நிறுவனங்களும் வெளியேறுவதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டனர்.

  இறுதிக்கட்ட நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் இரண்டு வங்கிகளுக்குமான லைசென்ஸ் ரத்து செய்யப்படும். ஐசிஐசிஐ வங்கி இலங்கையில் கடந்த 2006-ம் ஆண்டு முதன்முறையாகக் கால் பதித்தது. அதன் பின்னர் கடந்த 2011-ம் ஆண்டுதான் ஆக்சிஸ் வங்கி இலங்கையில் தனது கிளையைக் கொண்டு வந்தது.

  இதனால், இலங்கையில் இந்த வங்கி எவ்வித வங்கிசார் செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது. இலங்கை மக்களால் எவ்வித வங்கி டிபாசிட்டுகளையும் செய்ய முடியாது.

  மேலும் பார்க்க: தொடர்ந்து அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருவாய்... டிசம்பரில் மட்டும் 1.03 லட்சம் கோடி ரூபாய்!
  Published by:Rahini M
  First published: