ஹோம் /நியூஸ் /வணிகம் /

ட்விட்டரை வாங்கும் திட்டத்தை கைவிட்ட எலான் மஸ்க்..

ட்விட்டரை வாங்கும் திட்டத்தை கைவிட்ட எலான் மஸ்க்..

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

Elon Musk Twitter Deal abandon: 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தது அதிர்வலையை ஏற்படுத்துள்ளது. எலான் மஸ்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடர ட்விட்டர் திட்டமிட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் சிஇஓவான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார். சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழு பங்கை எலான் மஸ்க் வாங்க ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் போலி மற்றும் ஸ்பேம் கருத்துகளை பரப்பும் கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் ஊடகம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த கட்டுரை சுட்டு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க், ட்விட்டர் டீல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என கடந்த மே மாதம் அறிவித்தார்.

மேலும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த புள்ளி விவரங்களை தனக்கு அளிக்கும்படியும் எலான் மஸ்க் கோரியிருந்தார். எனினும், இந்த தகவல்கள் இதுவரை அவருக்கு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். பொலி கணக்குகள் குறித்து கேட்ட தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எச்சரிக்கை... ஆன்லைன் லோன் ஆப்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அவர் அறிவித்தது அதிர்வலையை ஏற்படுத்துள்ளது. எலான் மஸ்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், ட்விட்டர் வாரியம், திரு. மஸ்க்குடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விலை மற்றும் விதிமுறைகளின் மீதான பரிவர்த்தனையை முடிக்க உறுதிபூண்டுள்ளது மற்றும் இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர திட்டமிட்டுள்ளது. டெலாவேர் கோர்ட் ஆஃப் சான்சரியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Elon Musk, Social media, Twitter