Home /News /business /

இந்தியாவின் விதிகளை மீறிய டிவிட்டர் - எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்.!

இந்தியாவின் விதிகளை மீறிய டிவிட்டர் - எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்.!

Elon Musk

Elon Musk

Elon Musk VS Twitter | டிவிட்டர் மற்றும் எலான்மஸ்க் இடையே நடக்கும் சட்டப்போராட்டத்தில் டிவிட்டர் நிறுவனம் இந்திய அரசின் உத்தரவை மீறியதால் மிகப்பெரிய சந்தை அபாயத்தில் சிக்கியுள்ளதாக எலான் மஸ்க் அமெரிக்க நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றாக டிவிட்டர் செயல்படுகிறது. முக்கியமான விஷயங்களைப் பகிரவும், கருத்துகள் தெரிவிக்கும் தளமான டிவிட்டரை உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு வாங்குவதாக தெரிவித்திருந்தார். இதற்கான ஒப்பந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தான், டிவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார் எலான்.

ஆனால் டிவிட்டர் நிறுவனம் கூறியதை விட 4 மடங்கு போலி கணக்குள் இருப்பதாகவும், இதுக்குறித்த முழுமையானத் தகவலை டிவிட்டர் கூறவில்லை என்பதால் ஒப்பந்தத்தை கைவிடப்போகிறேன் என்று எலான் மஸ்க் அறிவித்த தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளும் 7 சதவீதம் சரிந்தது. இதனையடுத்து ஒப்பந்தத்தைக் கைவிடுமாறு கூறிய எலான் மஸ்க் மீது, டிவிட்டர் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள டெலாவர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

எலான் மஸ்க் மற்றும் டிவிட்டர் இருவருக்கிடையே உள்ள பிரச்சனைகள் மற்றும் மாறி மாறி இருதரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைப்பது மைக்ரோ பிளாக்கிங் தளங்களில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.



எலான் மஸ்க் மற்றும் டிவிட்டர் நிறுவனத்திற்கு இடையே நடைபெறும் வழக்குத் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ரகசியமாக பதில் மனு ஒன்றைத்தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவிற்கும், டிவிட்டருக்கும் இடையே கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக நிலவிவரும் பிரச்சனைக் குறித்து தெளிவாக சொல்லவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் டிவிட்டரில் தேவையற்ற கருத்துப்பதிவுகளைப் பகிரும் நபர்களின் பக்கங்களை இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2000-இன் கீழ் நீக்குமாறு டிவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியது. இதுக்குறித்த வழக்கும் கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Also Read : சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டாகிராம்... திடீரென எடுத்த அதிரடி முடிவு.! 

இந்தியாவின் இந்த உத்தரவை மீறியதால் டிவிட்டர் மிகப்பெரிய சந்தை அபாயத்தில் சிக்கியுள்ளதாகவும், எலான் மஸ்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்திருந்தார். இத்தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : 10 ரூபாயில் நெட்ஃபிளிக்சில் படங்கள் பார்க்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு

இதுக்குறித்து டிவிட்டர் நிறுவனம் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசாங்கம் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்ததிலிருந்து, சில கணக்குகளைக் கண்காணித்து வருகிறோம் எனக் கூறியுள்ளது. எனவே இந்திய அரசாங்கத்துடனான நிறுவனத்தின் தொடர்புகளை இந்த பிரிவில் வெளியிட தேவையில்லை என்றும் டிவிட்டர் தெரிவித்துள்ளது. இதோடு எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதோடு, இந்தியா தனது மூன்றாவது பெரிய சந்தை இல்லை எனத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுடனான வழக்குகளை வெளிப்படுத்தத் தேவையில்லை என்றும் எலான் மஸ்க்கின் மனுவிற்கு டிவிட்டர் நிறுவனம் பதிலளித்துள்ளது. இவ்வழக்குத் தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், என்ன நடக்கும்? இந்த சட்டப்போராட்டத்தில் எலான் மஸ்க்கா? அல்லது டிவிட்டர் நிறுவனமா? யார் ஜெயிப்பார்கள் ? என்பதைக் காண்பதற்கு உலகமே காத்திருக்கிறது…
Published by:Selvi M
First published:

Tags: Elon Musk, India, Twitter

அடுத்த செய்தி