உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த மாத இறுதியில் ஒப்பந்தம் போட்டார். 44 பில்லியன் டாலருக்கு இந்நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் எலான் மஸ்க் அறிவித்தார்.
ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த புள்ளி விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டது. அதில், ட்விட்டரில் 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகள் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டது. இந்த எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை, இதற்கு உரிய தரவுகள் வேண்டும் என எலான் மஸ்க் கூறி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்து எலான் மஸ்க் இன்று ட்வீட் செய்துள்ளார். அதில், ட்விட்டர் போலி கணக்குகள் எண்ணிக்கை குறித்து உரிய ஆதாரத்தை 'ட்விட்டர் சிஇஓ பிராக் அகர்வால் வெளியிட வேண்டும். ட்விட்டரில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேலாகவே போலி கணக்குகள் இருக்கும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை, 5 சதவீதத்திற்கு குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை ட்விட்டர் சிஇஓ பொதுவெளியில் வெளியிட மறுத்துவிட்டார். அவர் அதை செய்யாத வரை ட்விட்டர் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது' என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
20% fake/spam accounts, while 4 times what Twitter claims, could be *much* higher.
My offer was based on Twitter’s SEC filings being accurate.
Yesterday, Twitter’s CEO publicly refused to show proof of <5%.
This deal cannot move forward until he does.
— Elon Musk (@elonmusk) May 17, 2022
Space X, Tesla ஆகிய நிறுவனங்களின் சிஇஓவான எலான் மஸ்க் கடந்த மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கி பிரதான பங்குதாரராக உருவெடுத்தார்.
இதையும் படிங்க: என்னது! இந்தியர்கள் அந்த விஷயத்திற்காக தான் அதிக இன்சூரன்ஸ் எடுக்கிறார்களா?
அடுத்த வாரங்களிலேயே ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்குவேன் என கூறி, 44 பில்லியன் டாலர் தொகை ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டார். ஒப்பந்தம் உறுதியாக, எலான் மஸ்க் வசம் ட்விட்டர் முழுமையாக வந்ததும், இந்நிறுவனத்தின் சிஇஓவாகவும் எலான் மஸ்க் தான் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.