ஹோம் /நியூஸ் /வணிகம் /

டிவிஎஸ் மோட்டார்ஸ் 2 சக்கர வாகனம் விற்பனை அதிகரிப்பு... ஆனால் பங்குகள் சரிவு...!

டிவிஎஸ் மோட்டார்ஸ் 2 சக்கர வாகனம் விற்பனை அதிகரிப்பு... ஆனால் பங்குகள் சரிவு...!

டிவிஎஸ் மோட்டார்ஸ்

டிவிஎஸ் மோட்டார்ஸ்

2019-2020 நிதியாண்டில் 650 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்யவும் டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  2018-2019 நிதியாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் இரண்டு சக்கர வாகனம் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் மறுபக்கம் டிவிஎஸ் பங்குகள் இன்று 3 சதவீதம் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

  டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சென்ற நிதியாண்டில் 37.57 லட்சம் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே 2017-2018 நிதியாண்டில் 33.67 லட்சம் இரண்டு சக்கர வாகனங்களை விற்றிருந்தது.

  2018-2019 நிதியாண்டில் விற்பனையான 37.57 லட்சம் வாகனங்களில் 15.59 லட்சம் மோட்டார் சைக்கிள்களும், 11.35 லட்சம் ஸ்கூட்டர்கள் என்றும் டிவிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மோட்டார் சைக்கிள் விற்பனையில் 15 சதவீதமும், ஸ்கூட்டர் விற்பனையில் 14.6 சதவீதமும் அதிகம்.

  சென்ற நிதியாண்டின் 4-ம் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்சின் மூன்று சக்கரம் வாகன விற்பனை 44.8 சதவீதம் அதிகரித்து 42,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் 4-ம் காலாண்டில் 29,000 மூன்று சக்கரம் வாகனங்களை டிவிஎஸ் விற்றிருந்தது.

  மேலும் 2019-2020 நிதியாண்டில் 650 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்யவும் டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

  இன்று காலை 11:27 மணி நிலவரத்தின் படி டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்குகளின் மதிப்பு 16.05 புள்ளிகள் என 3.27 சதவீதம் சரிந்து 475.10 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: TVS