ஹோம் /நியூஸ் /வணிகம் /

டிவிஎஸ் மோட்டார்ஸ் 3-வது காலாண்டு அறிக்கை வெளியீடு: லாபம் 15% உயர்வு!

டிவிஎஸ் மோட்டார்ஸ் 3-வது காலாண்டு அறிக்கை வெளியீடு: லாபம் 15% உயர்வு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஸ்கூட்டர் விற்பனை 31.7 சதவீதம் உயர்ந்ததால் 3.54 லட்சம் வாகனங்களை மூன்றாம் காலாண்டில் டிவிஎஸ் விற்றுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  2 சக்கர வாகன மற்றும் ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-ம் காலாண்டில் நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து 178.4 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, டிவிஎஸ் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நிறுவனத்தின் வருவாய் 26 சதவீதம் உயர்ந்து 4,664.6 கோடியாக உள்ளது. இது 2017-ம் ஆண்டு 3,703.1 கோடி ரூபாயாக இருந்தது.

  அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் விற்பனை 20.3 சதவீதம் உயர்ந்து 3.78 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் 2017-ம் ஆண்டு 3.14 லட்சம் வாகனங்களை டிவிஎஸ் விற்றிருந்தது.

  ஸ்கூட்டர் விற்பனை 31.7 சதவீதம் உயர்ந்ததால் 3.54 லட்சம் வாகனங்களை மூன்றாம் காலாண்டில் டிவிஎஸ் விற்றுள்ளது.

  மேலும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மூன்று சக்கர வாகன விற்பனை 47 சதவீதமும், ஏற்றுமதி25.8 சதவீதமும் உயர்ந்துள்ளதாகவும் டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

  மேலும் பார்க்க: உதவி இயக்குனர்களின் வேடந்தாங்கல் சாலிகிராமம் காவேரி டீக்கடை

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: TVS