Home /News /business /

யெஸ் வங்கியில் ₹1300 கோடி வைத்திருந்த திருப்பதி தேவஸ்தானம் தப்பியது எப்படி?

யெஸ் வங்கியில் ₹1300 கோடி வைத்திருந்த திருப்பதி தேவஸ்தானம் தப்பியது எப்படி?

திருப்பதி (கோப்புப் படம்)

திருப்பதி (கோப்புப் படம்)

இன்றைய சூழலில் யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அடுத்த ஒரு மாதத்துக்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் பணம் எடுக்க முடியாது.

    யெஸ் வங்கியின் பணப் பரிவர்த்தனைக்கு நேற்று முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது சம்பளப் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு 1,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக நேற்று அறிவித்தது.

    இன்றைய சூழலில் யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அடுத்த ஒரு மாதத்துக்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் பணம் எடுக்க முடியாது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர்தான் திருப்பதி தேவஸ்தானம் தனது யெஸ் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக 1300 கோடி ரூபாயை எடுத்துள்ளது.

    படிக்க: யெஸ் வங்கியின் ATM, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முடங்கியது...! எப்படி பணத்தை எடுக்கலாம்...?

    யெஸ் வங்கியின் திறன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் அதனது போக்கு சரியில்லை என்பதை அறிந்த திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மொத்தப் பணத்தையும் எடுத்துவிட தீர்மானித்துள்ளார். இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தகவல் அளித்தப் பின்னர் தேவஸ்தானம் மொத்தப் பணத்தையும் கணக்கிலிருந்து எடுத்துள்ளது.

    மேலும் பார்க்க: யெஸ் வங்கி வாடிக்கையாளரா? நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
    Published by:Rahini M
    First published:

    Tags: Yes Bank

    அடுத்த செய்தி