Home /News /business /

MADE IN AMERICA அச்சிடுவதில் புதிய கட்டுப்பாடு: டிரம்ப் அதிரடி!

MADE IN AMERICA அச்சிடுவதில் புதிய கட்டுப்பாடு: டிரம்ப் அதிரடி!

ட்ரம்ப்  (REUTERS)

ட்ரம்ப் (REUTERS)

MADE IN AMERICA என்று, ஒரு பொருளில் அச்சிட வேண்டும் என்றால், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள 75 சதவித பொருட்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஐபோன் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா, சினா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்களுக்கு தேவையான உதிரிபாங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் MADE IN AMERICA என்று, ஒரு பொருளில் அச்சிட வேண்டும் என்றால், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள 75 சதவித பொருட்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இரும்பு மற்றும் ஸ்டீல் எனில் 95 சதவீதம் அமெரிகாவில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அமெரிக்காவில், ஒரு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ள 50 சதவீத உபபொருட்கள் அமெரிக்காவில் தயாரிக்கப் பட்டிருந்தாலே MADE IN AMERICA என அச்சடித்து கொள்ளலாம் என்று உள்ளது.

இதில் மாற்றம் கொண்டு வரும் புதிய உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்காவில் பொருளாதாரம் மேலும் அதிகரிக்கும் என்றும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும், உற்பத்தி துறையை வளர்க்க உதவும் என்றும், இறக்குமதி குறியும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Donald Trump

அடுத்த செய்தி