ஹோம் /நியூஸ் /வணிகம் /

வெளிநாட்டவர்களின் கணவன், மனைவிக்கு அமெரிக்காவில் வேலை கிடையாது- டிரம்ப் அதிரடி!

வெளிநாட்டவர்களின் கணவன், மனைவிக்கு அமெரிக்காவில் வேலை கிடையாது- டிரம்ப் அதிரடி!

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்-1பி விசா செயல்பாடுகளின் விதிகளை நெருக்கி வருகிறார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  H-1b விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஊழியர்களின் கணவன் அல்லது மனைவிக்கு, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற H-4 EAD என்ற முறை உள்ளது. இதை நீக்கும் நடவடிக்கையில் டிரம்ப் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

  அதற்காக அமெரிக்க அரசு மே 22-ம் தேதி முதல் H-4 EAD (Employment Authorisation Document) முறையில் வெளிநாட்டவர்களின் கணவன், மனைவிக்கு வேலைவாய்ப்பு அளிப்பதைத் தடை செய்வதற்காக பொதுமக்களின் கருத்துக்கணிப்பு கேட்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  மேலும் இப்படி வெளிநாட்டவர்களின் கணவன், மனைவிக்கு இங்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதன் மூலம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பெரும் அளவில் பாதிக்கப்படுகிறது. இந்த H-4 EAD முறையைத் தடை செய்வதன் மூலம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

  2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த H-4 EAD அனுமதியின் கீழ் 1.2 லட்சம் நபர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதில் 90 சதவீதத்தினர் இந்தியப் பெண் இஞ்சினியர்கள்.

  சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே H-4 EAD அனுமதியை நீக்க உள்ளதாக டிரம்ப் கூறி வருகிறார். இதுகுறித்து அமெரிக்க விசா கொள்கை பார்வையாளர்களிடம் கேட்ட போது, “இந்த H-4 EAD அனுமதியை நீக்குவதற்கான செயல்பாடுகள் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இங்கு அதை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அடுத்து அமெரிக்கப் பதிவு அலுவலர்கள் மற்றும் மக்களிடம் 30 முதல் 60 நாட்கள் வரை கருத்துக் கேட்கப்படும். பின்னர் அதில் எடுக்கப்படும் முடிவுகள் இறுதியாகும் என்று கூறுகின்றனர்.

  2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்-1பி விசா செயல்பாடுகளின் விதிகளை நெருக்கி வருகிறார்.

  எச்-1பி விசாவை பயன்படுத்தி அமெரிக்க செல்பவர்களில் 70 சதவீதத்தினர் இந்தியர்களாக உள்ளனர். அங்கு சென்ற பிறகு திருமணமானவர்கள் தங்களது துணைவர்களையும் அங்கு அழைத்துச் செல்வது அதிகரித்துள்ளது. அதைக் குறைத்து, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதே அவரது நோக்கம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: American visa, Donald Trump