ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ட்ரெண்ட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பொங்கல் போட்டிகளை அறிவித்துள்ளது. போட்டியில் வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கூப்பன் மற்றும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
தமிழ்நாட்டின் ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கலை தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். பாரம்பரிய உடை அணிந்தும், பொங்கலிட்டும், வண்ண வண்ண கோலங்கள் இட்டும் பொங்கலை கொண்டாடுவர். தமிழர்களோடு ஒன்றிணைந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ஆடைகள் விற்பனை ஸ்டோரான ட்ரெண்ட்ஸ் சிறப்பு பொங்கல் கோலப்போட்டியை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ட்ரெண்ட்ஸ் நிறுவனம் இந்த போட்டிகளை பொங்கல் விழாவை அடுத்து அறிவித்துள்ளது. அதன்படி பொங்கலன்று தங்கள் வீடுகளில் போடப்பட்ட அழகான கோலத்துடன் கூடிய செல்ஃபியை வாடிக்கையாளர்கள் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
சிறந்த கோலமாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டோ குறித்த விவரம் வாட்ஸ் அப் எண்ணில் அறிவிக்கப்படும். முதல் பரிசாக ரூ.1500 மதிப்புடைய பரிசு (ஒவ்வொரு ஸ்டோருக்கும்) வழங்கப்படும். அதுமட்டுமின்றி போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ட்ரெண்ட்ஸ் ஷாப்பில் பயன்படுத்தும் வகையில் தள்ளுபடி கூப்பன் வழங்கப்படும். இந்தப் போட்டி ஜனவரி 20ம் தேதி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபரை அருகில் உள்ள ட்ரெண்ட்ஸ் கிளைக்கு அழைத்து பரிசு கொடுக்கப்படும். பரிசை பிரபல பெண் மருத்துவர் அல்லது அரசாங்கத்தில் உள்ள மூத்த பெண் அதிகாரி வழங்குவார்கள். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஸ்டோரை அணுகவும்.
மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகைகளின் போது வாடிக்கையாளர்களுடன் இணைந்திருப்பதையும், அவர்களின் நன்மதிப்பையும் பெறும் நோக்கத்தில் ட்ரெண்ட்ஸ் இது மாதியான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023