முகப்பு /செய்தி /வணிகம் / ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கிறார்களா...? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி..!

ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கிறார்களா...? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி..!

10 ரூபாய் நாணயம்

10 ரூபாய் நாணயம்

10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் அதன் நம்பகத்தன்மை குறித்து வதந்திகள் குறையவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. ஆனாலும் 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது வதந்திகள்  பரவின. இதனால் 10 ரூபாய் நாணயங்கள் வைத்திருப்பவர்களின் சிரமத்தை சொல்லில் விளக்கவே முடியாது. கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுப்பதாக புகார் எழுந்தன. ஆக, 10 ரூபாய் கையில் இருந்தும்  அதை செலவழிக்க முடியாது. தமிழ்நாட்டில் சென்னையை தவிர எந்த ஊரிலும் அதை வாங்க மாட்டார்கள்.

இதையும் படிங்க: வொர்க் ப்ரம் ஹோம் ஊழியர்கள் கவனத்திற்கு... பட்ஜெட்டில் வருகிறது நற்செய்தி...!

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:- 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் அதன் நம்பகத் தன்மை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களும், வதந்தியும் பரப்பப்படுகிறது.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தன. குறிப்பாக பஸ் கண்டக்டர்கள், கடைக்காரர்கள், சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக  நாணய மேலாண்மை குழு கூடி விவாதித்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும். பஸ்களில் இதுதொடர்பாக அறிவிப்பு போஸ்டர் ஒட்ட வேண்டும். மேலும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும். வங்கிகளிலும் இது குறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்கள் வெளியிட வேண்டும். இதை மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக தொடரும் 10 ரூபாய் நாணய வதந்திக்கு மத்திய ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளதுஎன்றுகூறுகின்றனர்.

First published:

Tags: RBI, Ten rupees coin