Home /News /business /

இனி எங்கும் அலையவேண்டாம்.. வீட்டில் இருந்தே SBI கணக்கை வேறு கிளைக்கு மாற்றலாம்..... இதோ எளிய வழிமுறை!

இனி எங்கும் அலையவேண்டாம்.. வீட்டில் இருந்தே SBI கணக்கை வேறு கிளைக்கு மாற்றலாம்..... இதோ எளிய வழிமுறை!

SBI

SBI

State Bank of India | வங்கிக்கு செல்லாமல் SBI YONO மற்றும் SBI இணையதளத்தின் மூலமாக வீட்டிலிருந்தே இருந்தே உங்களது சேமிப்பு கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு சுலபமாக மாற்றிவிடலாம்.

    இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாக பாரத் ஸ்டேட் பாங்க் (SBI) வங்கி இயங்கி வருகிறது. தன்னுடைய வாடிக்கையாளர்களைத் தன் வசம் வைத்து கொள்வதற்கே புதிய புதிய அறிவிப்புகளையும், ஆஃபர்களையும் அள்ளிக்கொடுக்கும் இவ்வங்கி தற்போது தன்னுடைய அனைத்து சேவைகளையும் மக்களின் வசதிக்கான டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளது. குறிப்பாக கடந்த 2020 ஆண்டு நிலவரப்படி, 85 மில்லியன் இணைய வங்கி மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் யூசர்களை கொண்டுள்ளது.

    மேலும் தற்போது வங்கியில் டிஜிட்டல் தளமான YONO-வில் 35 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். இதோடு எஸ்பிஐ நாடு முழுவதும் 22 ஆயிரம் கிளைகள் மற்றும் 57, 889க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை கொண்டுள்ளது.

    இப்படி மக்களின் தேவைகளை அறிந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்தியுள்ள எஸ்பிஐ வங்கி, கடந்தாண்டு மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, எஸ்பிஐ சேமிப்பு கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு மணிக்கணக்கில் வங்கிகளில் நிற்காமல், சுலபமாக வீட்டில் இருந்தே SBI YONO மற்றும் SBI இணையதளத்தின் மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எப்படி மாற்றுவது என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.



    YONO SBI யைப் பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றம் செய்யும் முறை:

    1: முதலில், உங்களது மொபைல் போனில் YONO SBI யை லாகின் செய்யவும்.

    2: இதனையடுத்து Service என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

    3 :பின்னர் சேமிப்புக் கணக்கை மாற்றுதல் ( Transfer of Saving Account) என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    4: பிறகு உங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கி கிளையின் புதிய குறியீட்டை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் Get branch என்ற பெயரை கிளிக் செய்தால் புதிய கிளையின் பெயரை காண முடியும்.

    5: இது போன்று நீங்கள் செய்து முடித்ததும், உங்களது கணக்கை மாற்றுகிறீர்களா? என கேட்கும் போது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை (OTP) டைப் செய்து சமிட் (submit) பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்களது சேமிப்புக் கணக்கு வேறு கிளைக்கு மாற்றிவிடலாம்.

    Also Read : ATM கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்... இந்த 5 விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

    SBI இணையதளத்தை பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றம் செய்யும் முறை:

    1: முதலில் நீங்கள் எஸ்பிஐயின் https://www.onlinesbi.com/ அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று, லாகின் செய்து கொள்ளுங்கள்.

    2: பின்னர் Menu bar ல் உள்ள E- service என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

    3: இதன்பிறகு Transfer the saving account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

    4: இதனையடுத்து உங்களது வங்கிக்கோடு மற்றும் டிரான்ஸ்பர் செய்ய நினைக்கும் கிளையின் கோடு இரண்டையும் டைப் செய்ய வேண்டும்.

    5: பின்னர் Read and accept என்ற ஆப்சனை கிளிக் செய்து சப்மிட் கொடுத்த பின்னர் கன்பார்ம் செய்யும் முன்னர் நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியா என்பதை பார்த்து கொள்ளவும்.

    6: இறுதியில் உங்களது மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை சரிபார்த்து confirm பட்டனை கிளிக் செய்ய வேண்டும். தற்போது உங்களது சேமிப்பு கணக்கு வேறு கிளைக்கு மாறிவிடும்.
    Published by:Selvi M
    First published:

    Tags: E Service, State Bank of India

    அடுத்த செய்தி