ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரயில் கட்டணம் குறைப்பு... இனி சிறப்பு ரயில்கள் இல்லை - இந்திய ரயில்வே அறிவிப்பு!

ரயில் கட்டணம் குறைப்பு... இனி சிறப்பு ரயில்கள் இல்லை - இந்திய ரயில்வே அறிவிப்பு!

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

மிக குறுகிய தொலைவுள்ள பேசஞ்சர் வண்டிகளுக்கும் கூட அதிக டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலை அனைத்தும் ரத்து செய்யப்படும் கடந்த வெள்ளியன்று இந்திய ரயில்வேயில் இருந்து அறிவிப்பு வந்தது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ரயில் போக்குவரத்து இந்தியாவில் மிக மிக முக்கியமான போக்குவரத்துமுறைகளில் ஒன்று. மண்டல வாரியாக பிரிக்கப்பட்ட ரயில்வேயில், நாடு முழுவதும், தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஆனால், ஊரடங்கு காரணமாக, ரயில் போக்குவரத்து இல்லாமல் பல மாதங்கள் தினசரி ரயில் பயணம் செய்வோர் அவதிப்பட்டனர்.

அத்தியாவசியமாகப் பயணம் செய்பவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே, கடுமையான கட்டுப்பாடுகளுடன் தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரயில்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயங்கத் தொடங்கின. தினசரி பயணிகள் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயங்கி வந்தன.

நீண்ட தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கு சிறப்பு ரயில்கள் என்று பெயரிடப்பட்டு அதிக கட்டணம வசூலிக்கப்பட்டன. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் ரயில்களின் தேவை அத்தியாவசியமாக இருந்ததால் பல பயணிகள் பலன் அடைந்தனர். இந்நிலையில், ரயில் பயணிகள் மகிழும் வண்ணம் இந்திய ரயில்வே நிறுவனம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கடந்த வாரம் அறிவித்துள்ளது.

கோவிட் தொற்று காலத்திலும் குறுகிய மற்றும் நீண்ட தொலைவுக்கான சிறப்பு ரயில்கள் உரிய பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு இயங்கி வந்தன. ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன எனவே நாம் அனைவரும் பயணிக்கலாம் என்று மக்கள் ஊரடங்கு நேரத்தில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள கூடாது என்பதற்காக ரயில் டிக்கெட் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

மிக குறுகிய தொலைவுள்ள பேசஞ்சர் வண்டிகளுக்கும் கூட அதிக டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலை அனைத்தும் ரத்து செய்யப்படும் கடந்த வெள்ளியன்று இந்திய ரயில்வேயில் இருந்து அறிவிப்பு வந்தது. சிறப்பு ரயில்கள் என்ற சலுகை நீக்கப்பட்டு அனைத்து ரயில்களும் சாதாரணமாகவே இயக்கப்படும். அதுமட்டுமின்றி உயர்த்தப்பட்ட ரயில் டிக்கெட் விலையும் இனி குறைக்கப்படும்.

Also read... மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக "E-Amrit" போர்ட்டலை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு!

கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தில் வசூலிக்கப்பட்ட அதே கட்டணம் இனி வசூலிக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. நீண்ட தூரம் மற்றும் குறுகிய தூர என்று அனைத்து விரைவு ரயில்களும் சிறப்பு ரயில்கள் என்ற ஸ்பெஷல் குறியீடோது கடந்த சில மாதங்களாக இயங்கிவந்தன. தற்போது மண்டல ரயில்வேக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு அறிவிப்பில் இனி ரயில்கள் வழக்கமாக இயங்கும். அதுமட்டுமின்றி, ரயில் கட்டணம் ரயிலின் வகை மற்றும் எந்த வகுப்பில் டிக்கெட் வாங்கப்படுகிறது என்ற அடிப்படையில் வழக்கம் போல கட்டணம் விதிக்கப்படும் முறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்னும் சில வாரங்களில், 1700 ரயில்கள் பழையபடி தினமும் இயங்கத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்கள் பழைய அட்டவணையை பின்பற்றி, பழைய விலைகளில் டிக்கெட்டுகள் வசூலிக்கப்படும். ஆனால், மெத்தை, உணவு சேவைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Indian Railways