ஹோம் /நியூஸ் /வணிகம் /

மொபைலில் இனி Truecaller தேவையில்லை... புதிய அப்டேட் அறிமுகம்

மொபைலில் இனி Truecaller தேவையில்லை... புதிய அப்டேட் அறிமுகம்

ஸ்பேம் கால்ஸ்

ஸ்பேம் கால்ஸ்

Truecaller | TRAI கொண்டு வர உள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம் மொபைல் யூஸ்ர்களின் மொபைலில் லைவ் நேம் டிஸ்பிளே செய்யப்படும் என்பதால் போலி அழைப்புகளை தவிர்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மொபைல் யூஸர்கள் ஸ்பேம் கால்ஸ்களின் பிரச்சனையில் இருந்து விடுபடும் வகையில் புதிய அம்சம் ஒன்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் டெலிகாம் ரெகுலேட்டரான டிராய் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான Trai அடுத்த மூன்று வாரங்களுக்குள் KYC மூலம் சரிபார்க்கப்பட்ட மொபைல் ஃபோன் காலர் ஐடென்டிட்டி சிஸ்டமை வெளியிட உள்ளது.

  Trai வெளியிட உள்ள இந்த புதிய அம்சம் மூலம் உங்கள் மொபைலுக்கு சேமிக்கப்படாத நம்பரிலிருந்து கால்ஸ் வரும் போது, அந்த கால் செய்பவரின் பெயர் ஸ்கிரீனில் தோன்றும். இந்த அம்சம் செயல்பட KYC உதவுகிறது. எப்படி என்றால் ஒருவர் சிம் கார்டை வாங்கும் போது நிரப்பப்ட்ட அல்லது நிரப்பப்படும் படிவத்தில் யாருடைய பெயர் கொடுக்கப்படுகிறதோ கார்டு யாருடைய பெயரில் வாங்கப்படுகிறதோ அந்த நபரின் பெயர் மொபைல் ஸ்கிரீனில் தோன்றும். இந்த புதிய அம்சத்தால் ஸ்பேம் கால்ஸ் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். பிரபலமான Truecaller ஆப்-ற்கு மாற்றாக அரசு சார்பில் இந்த காலர் ஐடி சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  ஸ்பேம் கால்ஸ்களால் யூஸர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைய பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் பி.டி. வகேலா தகவல் தெரிவித்தார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வகேலா, புதிய தொழில்நுட்பங்களை சுமூகமாக ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், மாநில மற்றும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதையும் உறுதிசெய்ய, ஒழுங்குமுறை மற்றும் சட்டக் கட்டமைப்பை புதிய முன்னேற்றங்களுடன் தக்க வைக்க வேண்டும்.

  ஒன்றிணைந்த புதிய தொழில்நுட்ப உலகில், ‘மல்டிபிள் ஸ்கிரீன்ஸ், சேம் கன்டென்ட்’ என்ற சூழலை கருத்தில் கொண்டு, சாத்தியமான சீரமைப்பு குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளின் வழக்கமான தொழில்நுட்பங்களுக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் இடையில் நாம் ஒழுங்குமுறை ஏற்றத்தாழ்வைக் கொண்டிருக்க கூடாது. இருப்பினும் அதே நேரம் புதுமை மற்றும் போட்டியையும் நாம் தடுக்கக்கூடாது என்றார்.

  SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கான கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது!

  TRAI கொண்டு வர உள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம் மொபைல் யூஸ்ர்களின் மொபைலில் லைவ் நேம் டிஸ்பிளே செய்யப்படும் என்பதால் போலி அழைப்புகளை தவிர்க்கலாம். டெலிகாம் துறையின் விதிகளின்படி, இந்த சிஸ்டம் ஆக்டிவேட் ஆகும் போது KYC அடிப்படையில் கால் செய்பவரின் பெயர் எதிர்முனையில் இருப்பவரின் ஸ்கிரீனில் தோன்றும் என்பதால் மோசடி நோக்கத்திற்காக கால் செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்கின்றனர் அதிகாரிகள்.

  எந்த ஆப்ஸ் இல்லாமலும் மொபைலில் கால் செய்பவரின் பெயர்:

  ஸ்பேம் கால்ஸ்களின் தொந்தரவில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற டெலிகாம் ரெகுலேட்டரான TRAI வழங்கும் இந்த வசதி விரைவில் அனைத்து மொபைல்களிலும் செயல்படுத்தப்படும். இந்த அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்ட பின்னர் மொபைல் யூஸர்கள் வேறு எந்த ஆப்ஸின் துணையும் இன்றி தங்கள் மொபைல் நம்பருக்கு கால் செய்பவர்களின் பெயர்களை பார்க்கும் வசதியை பெறுவார்கள். அதாவது இந்த அம்சம் நேரடியாக அழைப்பவரின் பெயரை வெளிப்படுத்தும். புதிய நம்பரிலிருந்து கால்ஸ் வந்தால் கால் செய்பவரின் நம்பருக்கு பதில் அவரின் பெயர் KYC அடிப்படையிலான காலர் ஐடென்டிட்டி சிஸ்டம் மூலம் காட்டப்படும்.

  ஒரே நாடு,ஒரே தங்கம் விலை... இந்தியாவுக்கு முன்மாதிரி ஆகும் கேரளா..

  ட்ரூகாலர் :

  நம்மில் பெரும்பாலானோர் ஸ்பேம் கால்ஸ்களில் இருந்து தப்பிக்க ட்ரூகாலரை பயன்படுத்தி வருகிறோம். தற்போது ட்ரூகாலர் ஆப் மூலம் நமக்கு முன்பின் தெரியாத நம்பரில் தகவல்கள் கிடைக்கின்றன. இருப்பினும் இதில் காணப்படும் காலர்ஸ்களின் தகவல் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும் ட்ரூகாலர் ஆப்ஸில் டேட்டாக்களை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: KYC, Mobile phone