Home /News /business /

வருடத்தில் 13 முறை ரீசார்ஜ்? குறைந்தபட்சம் 30 நாள் வேலிடிட்டி குடுங்க - டிராய் அறிவுறுத்தல்

வருடத்தில் 13 முறை ரீசார்ஜ்? குறைந்தபட்சம் 30 நாள் வேலிடிட்டி குடுங்க - டிராய் அறிவுறுத்தல்

 ரீசார்ஜ்

ரீசார்ஜ்

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சாதகமான Trai-யின் இந்த உத்தரவு மூலம் இனி ஒரு வருடத்தில் வாடிக்கையாளர்கள் செய்யும் ரீசார்ஜ்களின் எண்ணிக்கையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாட்டில் இருக்கும் முன்னணி மற்றும் பிரபல டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்டு செக்மென்ட்டில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகின்றன. இந்த பிளான் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வருடத்தில் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. வருடத்திற்கு 12 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களால் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருப்பதாக பல மாதங்களாக யூஸர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

ஒரு மாதம் என்றால் 30 அல்லது 31 நாட்கள் என்னும் நிலையில் ரீசார்ஜ் பிளான் மட்டும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டு 1 மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படுவதும், நடைமுறையில் இருப்பதும் என்ன கணக்கு என்று பல நாள் கேள்விக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பதில் அளிக்க நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளது. நாட்டில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு செக்மென்ட்டில் 30 நாள் வேலிடிட்டி கொண்ட மொபைல் ரீசார்ஜ் பிளான்களை கட்டாயம் வழங்க வேண்டும் கூறி இருக்கிறது.

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சாதகமான Trai-யின் இந்த உத்தரவு மூலம் இனி ஒரு வருடத்தில் வாடிக்கையாளர்கள் செய்யும் ரீசார்ஜ்களின் எண்ணிக்கையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தனது சமீபத்திய அறிக்கையில் டிராய் தெரிவித்து இருப்பதாவது, "நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரும் (telecom service provider) குறைந்தது ஒரு பிளான் வவுச்சர், ஒரு ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு காம்போ வவுச்சரையாவது வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளது.

இதையும் படிங்க :  திருமணமான தம்பதியர் ரூ.10,000 பெறலாம்... அடல் பென்ஷன் திட்டம் தெரியுமா?

டிராயின் இந்த அறிக்கை மொபைல் போன் சேவை வழங்குநர்கள் ஒரு பிளான் வவுச்சர், ஒரு ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சரை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. மேலும் விதிகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியாவின் டெலிகாம் ரெகுலேட்டரான டிராயின் "குறைந்தபட்சம் ஒரு 30 நாள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை வழங்குங்கள்" என்ற இந்த புதிய உத்தரவு நாட்டில் உள்ள பல ப்ரீபெய்ட் யூஸர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உள்ளது.

கடந்த ஆண்டு TRAI ஒரு ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டிருந்த நிலையில் பிறகு இந்த நுகர்வோர் நட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமா என்று அனைத்து ஸ்டேக் ஹோல்டர்களிடமும் கேட்டு கடந்த ஆண்டு மே மாதம் டிராய் ஒரு ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. மாதாந்திர திட்டங்களுக்காக ஒரு வருடத்தில் 13 ரீசார்ஜ்கள் செய்யப்படுவதாக நுகர்வோர் கூறியது உட்பட பல புகார்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக TRAI கூறியிருந்தது.

இதையும் படிங்க :  ரூ. 10,000 அபராதத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி PAN கார்டுடன் ஆதாரை இணைப்பது!

28 நாட்கள் வேலிடிட்டி பிளான்கள் புழக்கத்தில் இருப்பதால் நுகர்வோர் தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்கிறார்கள் என புகார் அதிகம் எழுந்துள்ளதாக டிராய் அந்த கட்டுரையில் கூறி இருந்தது. ஆனால் 28 நாட்கள் வேலிடிட்டி பிளான்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து வாதிட்டு வந்த நிலையில், நுகர்வோர் உணர்வுக்கு மதிப்பளித்து டிராய் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: TRAI

அடுத்த செய்தி