Home /News /business /

பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் - TRAI அதிரடி உத்தரவு!!

பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் - TRAI அதிரடி உத்தரவு!!

TRAI

TRAI

வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொண்டு அமல்படுத்தப்படும் இந்த திருத்தத்தின் மூலம், டெலிகாம் சந்தாதாரர்கள் சரியான செல்லுபடியாகும் மற்றும் கால அளவு கொண்ட சேவைகளை தேர்வு செய்ய கூடுதல் விருப்பங்களை பெறுவார்கள்

    30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் உத்தரவிட்டுள்ளது.

    தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பெல்லாம் பிரீபெய்ட் திட்டங்களுக்கான மாத வேலிடிட்டியை (திட்டம் செல்லுபடியாகும் காலம்) 30 நாட்கள் என நிர்ணயித்திருந்தன. ஆனால் இதுவே காலப்போக்கில், 28 நாட்களாக குறைந்துவிட்டது. பெரும்பாலான ஆபரேட்டர்கள் தங்களின் மாதாந்திர திட்டத்தை 28 நாட்களாகவே நிர்ணயித்திருக்கின்றன. இது தவிர்த்து இரண்டு மாதங்களுக்கான திட்டம் 54 நாட்களாகவும், மூன்று மாதங்களுக்கான திட்டம் 84 நாட்களாகவும் குறைக்கப்பட்டன. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    Also read:  நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி முதியவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?

    தற்போதைய திட்டங்களின்படி வருடத்துக்கு 13 முறை மாத ரீசார்ஜ் செய்ய வேண்டியிருப்பதாகவும், இது தங்களுக்கு சிரமத்துடன் ஏமாற்றப்படும் உணர்வை தந்துள்ளதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ள ட்ராய், எனவே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்தபட்சம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ஒரு ரீசார்ஜ் திட்டத்தையும், ஒரு சிறப்பு கட்டண (Tarrif) திட்டத்தையும், ஒரு காம்போ திட்டத்தையும் அளிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக 1999 தொலைத்தொடர்பு ஆணையில் திருத்தம் செய்திருப்பதாகவும் ட்ராய் தெரிவித்திருக்கிறது.

    Also read:   டாய்லெட்டுடன் சுற்றித்திரியும் வடகொரிய அதிபர்.. அதை யார் தொட்டாலும் சுட்டு விடுவாராம்!! - ரகசியம் என்ன?

    வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொண்டு அமல்படுத்தப்படும் இந்த திருத்தத்தின் மூலம், டெலிகாம் சந்தாதாரர்கள் சரியான செல்லுபடியாகும் மற்றும் கால அளவு கொண்ட சேவைகளை தேர்வு செய்ய கூடுதல் விருப்பங்களை பெறுவார்கள் என்று ட்ராய் விளக்கியிருக்கிறது. இது நுகர்வோர் அதிக தகவலறிந்த கட்டணங்கள் தொடர்பான தேர்வை மேற்கொள்ளவும் உதவும்.

    அதே நேரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ட்ராயின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போதைய வேலிடிட்டி காலத்தில் மாற்றம் செய்வது எளிதல்ல, இது பூதாகரமானது, பல நிர்வாக ரீதியான மாற்றங்களை செய்ய நேரிடும் என அவை தெரிவித்திருக்கின்றன..

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Mobile networks, TRAI

    அடுத்த செய்தி