புதிய கட்டண முறையில் கேபிள் கட்டணங்கள் குறையும்: டிராய் தலைவர் விளக்கம்

கேபிள் மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வர இருக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்களுக்கு வேண்டிய சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்கும் புதிய கட்டண முறை முழுமையாக அமலுக்கு வருகிறது.

news18
Updated: March 26, 2019, 8:45 PM IST
புதிய கட்டண முறையில் கேபிள் கட்டணங்கள் குறையும்: டிராய் தலைவர் விளக்கம்
மாதிரிப் படம்
news18
Updated: March 26, 2019, 8:45 PM IST
புதிய கட்டண முறையால் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்களின் மாத செலவு அதிகரிக்காது என்று தொலைத்தொடர்பு ஆணையமான டிராயின் தலைவர் ஆர் எஸ் ஷர்மா கூறியுள்ளார்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் கேபிள் மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்கும் புதிய கட்டண முறை முழுமையாக அமலுக்கு வருகிறது.

டிராய் கொண்டு வந்துள்ள புதிய கட்டண முறையின் கீழ் சேனல் ஒளிபரப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகபட்சம் 19 ரூபாய்க்குட்பட்டு சேனல்களுக்குத் தனித்தனியாகக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடு மூன்று முறை மாற்றப்பட்டு 2019 ஏப்ரல் 1 முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.

இது குறித்து டிராய் ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா கூறுகையில், “90 சதவீத மக்கள் 50 சேனல்களுக்கும் அதிகமாகப் பார்ப்பதில்லை. புதிய கட்டண முறையில் தனது டி.டி.எச் கட்டணம் கூட 700 ரூபாயிலிருந்து 236 ரூபாயாகக் குறைந்துள்ளது.

கேபிள் டிவி மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் தற்போது 130 ரூபாய்க்கு 100 இலவச சேனல்களை பெறுகிறார்கள். பிற கட்டண சேனல்களை தனித்தனியாகவும், தொகுப்பாகவும் வாடிக்கையாளர்களால் பெற முடியும்.

சில கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புதிய கட்டண முறையை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை என்று டிராக்கு புகார் வந்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகும் புதிய கட்டண முறையை அறிமுகம் செய்யாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஆர்.எஸ்.ஷர்மா கூறினார்.

மேலும் பார்க்க:
First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...