முகப்பு /செய்தி /வணிகம் / பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பு..

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பு..

Stock market

Stock market

CDSL-ன் சர்வரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ய முடியாத நிலை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்து, பெற்ற லாபத்தை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

பங்குச்சந்தை வர்த்தக தரகு நிறுவனங்களான, ஐசிஐசிஐ DIRECT, ZERODHA, UPSTOCKS போன்ற தரகு நிறுவனங்களின் மூலம் பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களால் பங்குகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு CDSL என்று அழைக்கப்படும் Central Depository Services-ன் தரப்பில் இருந்து தான் பிரச்சனை என்று பங்கு தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு முதலீட்டாளர் என்ன பங்கை வாங்குகிறார், எவ்வளவு பங்குகளை வாங்குகிறார் என்பன போன்ற முக்கிய தரவுகள் மற்றும் டிமேட் கணக்குகள் இந்த Central Depository Services வசம் தான் இருக்கும்.

Also read: சமோசாவுக்காக அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் – வீடியோ!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ZERODHA, UPSTOCKS போன்ற தரகு நிறுவனங்கள், CDSL-ன் சர்வரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, பங்குகளின் விலை அதிகரித்தும் அதை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டனர்.

First published:

Tags: Securities, Sensex, Stock market