Home /News /business /

முதலுக்கே மோசம்... இன்சூரன்ஸ் விஷயத்தில் இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க!

முதலுக்கே மோசம்... இன்சூரன்ஸ் விஷயத்தில் இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க!

கோப்புப் படம்

கோப்புப் படம்

insurance | காப்பீட்டின் முதன்மையான நோக்கமே காப்பீடு செய்யக்கூடிய நிகழ்வு அல்லது பொருட்களுக்காக ஏற்படும் பண இழப்பிற்கு பதிலாக அதற்கான பாதுகாப்பை தருவது ஆகும்.

வங்கி சேமிப்புகளையும், கையிருப்பையும் கரைக்காமல் இருக்கவே பலரும் இன்சூரன்ஸை தேர்வு செய்கின்றனர். இன்சூரன்ஸுக்கான முதலீட்டு பயணத்தை தொடங்க திட்டமிடுவது என்பது, ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு முன் சரியான அடித்தளத்தை அமைப்பது போன்றது. காப்பீட்டுத் தொகை இல்லாமல், உங்கள் முதலீடுகள் அனைத்தும் வீணாகிவிடும்.

எந்தவொரு நிதித் திட்டத்திற்கும், முதல் நடவடிக்கை போதுமான காப்பீட்டுத் தொகையை முடிவு செய்வது ஆகும். ஏனென்றால், காப்பீடு இல்லாத சமயத்தில் ஏற்படும் செலவுகள் கணிக்க முடியாதவை, அதே சமயம் காப்பீட்டுத் தொகையை எடுக்க செலுத்தப்படும் பிரீமியம் கணிக்கக்கூடியதாக இருக்கும் என்பதால் அதனை சரியாக செலுத்த முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

எனவே, ஒரு ஆபத்திலிருந்து பாதுகாக்க மட்டும் அல்ல, உங்கள் முதலீடுகளைப் பாதுகாப்பதற்கும் காப்பீடு முக்கியமானது. இருப்பினும், சரியான பாதுகாப்பிற்காக, இன்சூரன்ஸ் எடுக்கும் போது நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்கள் நிதி நிலையை மோசமாக்கலாம். அது என்னவென இப்போது பார்க்கலாம்...

ஆயுள் காப்பீடு இல்லாமல் போவது:

உங்களை சார்ந்த குடும்பத்தினருக்காக நீங்கள் ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்வது அவசியமானது. ஏனென்றால் வீட்டில் நீங்கள் மட்டும் சம்பாதிக்கும் நபர் என்றால், நீங்கள் இல்லாத சமயத்தில் பிற செலவினங்கள், குடும்ப தேவைகளை சமாளிப்பது பெரும் சிரமமாக அமையும்.

எனவே, குடும்பத்திற்காக சம்பாதிக்கும் நபரின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்குப் பிறகு, நிதி சார்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்ய, போதுமான தொகைக்கு ஆயுள் காப்பீட்டு செய்திருப்பது மிகவும் முக்கியம்.

காப்பீடு மற்றும் முதலீட்டு கலவை:

காப்பீட்டின் முதன்மையான நோக்கமே காப்பீடு செய்யக்கூடிய நிகழ்வு அல்லது பொருட்களுக்காக ஏற்படும் பண இழப்பிற்கு பதிலாக அதற்கான பாதுகாப்பை தருவது ஆகும். எவ்வாறாயினும், எண்டோமென்ட் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள், காப்பீட்டுக் காலத்தின் போது பாலிசிதாரரின் அகால மரணம் ஏற்பட்டால், நாமினிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகையை செலுத்துவதற்கான முதன்மை நோக்கத்துடன், முதிர்ச்சியின் மீதான வருவாயை வழங்குகிறது.

காப்பீடு மற்றும் முதலீட்டை இவ்வாறு கலக்காமல் இருப்பது நல்லது:

1. டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளை விட எண்டோவ்மென்ட் பாலிசிகளின் பிரீமியம் தொகை அதிகம்.

2. ரிட்டன் வருமான விகிதம் பெரும்பாலும் முதலீட்டு தயாரிப்புகளை விட குறைவாக உள்ளது

3. முதலீட்டுப் பணத்தைப் பெறுவதற்கு முதிர்வுக்கு முன் உங்கள் பாலிசியை ஒப்படைக்க விரும்பினால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

காப்பீட்டுத் திட்டங்களை மதிப்பாய்வு செய்து புதுபிப்பது:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமான உயர்வு, மாறுபடும் சூழ்நிலையின் காரணமாக உங்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தின் தொகையை அதிகரிக்க திட்டமிடலாம். எனவே, உங்கள் காப்பீட்டுத் தொகையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, தேவைப்படும்போது, ​​தொகையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம்.

போதுமான அளவு ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜ் இல்லாதது:

குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இருப்பது நல்லது. குறிப்பிட்ட நபரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு பாலிசி எடுக்காமல் விட்டு, அதன் பின்னர் நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செலவு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, உடல்நலக் காப்பீட்டின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து, கூடிய விரைவில் காப்பீடு பெறுவது நல்லது. சிகிச்சையின் விலை அதிகரிப்புடன், நீங்கள் காப்பீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டும்.

Also see... போஸ்ட் ஆபீஸில் மாதம் ரூ. 1400 சேமித்தால் ரூ. 35 லட்சம்!

விபத்து காப்பீடு இல்லாமல் போவது:

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர் கூட, என்றாவது ஒருநாள் எதிர்பாராத விதமாக காயம், ஊனம் அல்லது உயிர் இழப்புக்கு வழிவகுக்கும் விபத்தை சந்திக்கலாம்.

எனவே, விபத்து காரணமாக ஏற்படும் நிதி இழப்புகளுக்கு எதிராக சுய பாதுகாப்பு மற்றும் நிதி சார்ந்திருப்பவர்களின் பாதுகாப்பிற்காக விபத்துக் காப்பீடுகளை எடுப்பது முக்கியம்.

மூன்றாம் நபர் காப்பீடு எடுக்காமல் இருப்பது:

மூன்றாம் நபர் காப்பீடு என்பது, வாகனம் விபத்துக்குள்ளாகும்போது, நமது வாகனத்தால், மூன்றாம் நபருக்கு ஏற்படும் இழப்பை, ஈடுசெய்வற்கான காப்பீடாகும். சில சமயங்களில் நமது வாகனத்தால் விபத்தைச் சந்திக்கும் நபருக்கு சில ஆயிரங்களில் தொடங்கி கோடிக்கணக்கில் கூட இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, எந்தவொரு நபருக்கும் தீங்கு விளைவிக்கும் வாகனம் மற்றும்/அல்லது இயந்திரங்கள் உங்களிடம் இருந்தால், குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பு காப்பீட்டையாவது எடுப்பது நல்லது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Insurance

அடுத்த செய்தி