இன்றைய காலத்தில் சேமிப்பு என்பது வாழ்வின் மிக முக்கியமான ஒரு அங்கமாக மாறிவிட்டது. கொரோனா தொற்றிற்கு பின் அவசர நிலையில் ஏற்படும் தேவைகளை சமாளிக்க பணத்தை சேமித்து வைப்பதன் முக்கியத்துவத்தை மக்கள் அறியத் துவங்கியுள்ளனர். நீங்கள் மட்டுமின்றி உங்களின் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் சேமிப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு உங்களது சேமிப்பை எந்த விதத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை பற்றிய புரிதல் அவசியம். மேலும் அதிக ரிஸ்க் எடுக்காமல் அதே சமயத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும் வழியை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள பிள்ளைகளுக்கு அது பேருதவியாக இருக்கும்.
முதலீட்டின் நோக்கம் பலவாறு இருக்கலாம். வீடு வாங்குவதும் கார் வாங்குவதும் அல்லது உங்களின் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக இப்போது இருந்தே சிறிது சிறிதாக சேமித்து வைப்பது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி மேலே கூறிய அனைத்தையும் பூர்த்தி செய்ய உதவும் டாப் 5 முதலீட்டு திட்டங்களை பற்றி பார்ப்போம்.
சிறு சேமிப்பு திட்டம்:
நடுத்தர வர்க்க மக்களுக்கு இது பேருதவியாக அமையும். சுகன்யா சம்ரிதி ஸ்கீம், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் என பலவிதமான சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இவை நீண்ட காலத்திற்கு செயல்பட்டு அதன் பின்னர் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு லாபத்தை உங்களுக்கு கொடுக்கும். மேலும் இவற்றில் பண இழப்பு அபாயமும் குறைவாக இருக்கும். அதிக பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் நீண்ட கால அடிப்படையில் நல்லதொரு லாபத்தையும் கொடுக்கும். உங்களின் குழந்தையின் வயது மற்றும் உங்கள் எதிர்காலத் தேவையை கணக்கில் கொண்டு எந்தவித திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்
மியூச்சுவல் ஃபண்ட்ஸ்:
இவை குழந்தையின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு முதலீடு செய்ய ஏற்று திட்டமாகும். சிறுசேமிப்பு திட்டத்தை விட இவற்றின் மூலம் அதிக அளவு லாபம் கிடைக்கும் அதே சமயத்தில் இதில் ஆபத்தும் அதிகம். எனவே பங்கு நிதியின் முதலீடு செய்யும் போது அதில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டு மிக குறைவான ஆபத்து இருக்கும் வகையில் முதலீடு செய்வது உகந்தது.
தொடர் மற்றும் நிலையான வைய்ப்புகள்:
குழந்தையின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு முதலீடுகளை செய்யும் போது சில நேரங்களில் எதிர்பாராத அவசரகதியில் பயன்படுத்துவதற்காக முதலீடு செய்வது அவசியம். உதாரணத்திற்கு ஒரே சமயத்தில் கல்விக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும், அதே சமயத்தில் அவசரகதி மருத்துவ செலவுகளும் இருந்தால் இவற்றை சரி செய்வதற்கு உங்களிடம் ஒரு முதலீடு இருக்க வேண்டியது அவசியம். எனவே இந்த தொடர் மற்றும் நிலையான வைப்புக்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு லாபம் கிடைப்பது மட்டுமல்லாமல் தேவையான நேரங்களில் உங்கள் அவசர நிலையின் போது பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் வங்கிகளில் இதற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன மேலும் இதன் வட்டி விகிதமும் தற்போது அதிகரித்து வருகிறது.
சவரன் கோல்டு பாண்ட்:
எந்த காலத்திலும் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நல்ல முடிவாக தான் இருக்கும். சவரன் கோல்ட் பாண்ட் திட்டத்தின் உங்களுக்கு 2 ½ சதவீதம் அளவு வட்டி கிடைக்கிறது.
ULIP முதலீடு:
யூனிட் லிங்க் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் குறைவான ஆபத்துகளுடன் தேவையான அளவு லாபமும் நமக்கு கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் ஆயுள் காப்பீடு திட்டமும் இணைந்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த யூஎல்ஐபி திட்டம் பல்வேறுவித நன்மைகளை ஒரே முதலீட்டில் கொடுக்கும் விதத்தில் உள்ளது.
முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக நீங்கள் செய்து வைத்துள்ள முதலீட்டின் நிலையை அவ்வப்போது சோதனை செய்து கொள்வது நல்லது. மேலும் நீண்ட கால அடிப்படையில் செய்துள்ள முதலீடுகளில் தற்போது என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது எந்த விதமான ஆபத்துக்கள் உள்ளன ஆகியவற்றையும் அவ்வப்போது சரி பார்க்க வேண்டும்.
இதைப் பற்றி பேசிய பேங்க் பசாரின் சிஇஓ ஆதில் ஷெட்டி கூறுகையில் “உங்கள் குழந்தை எதிர்காலத்திற்காக சேமிப்புகளை செய்வது என முடிவு செய்துவிட்ட பின் எந்த காரணத்திற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் திருமணம் கல்வி வாழ்வாதாரம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். முதலில் சிறிய அளவில் முதலீடு செய்து அவற்றில் ஒரு பிடிமானம் வந்தபின் பொருளாதார ரீதியாக நாம் நிறைவு பெற்ற பிறகு நீண்ட கால அடிப்படையில் பெரிய தொகைகளை வைத்து முதலீடு செய்யலாம். உங்கள் திட்டங்களை சிறிது சிறிதாக வகுத்து மாத தவணையில் சேமிப்புகளை மேற்கொள்ளும் விதத்திலும் செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Savings