Home /News /business /

Explainer: லோன் மூலம் கார் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா?

Explainer: லோன் மூலம் கார் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா?

கோப்புப்படம்

கோப்புப்படம்

கார் வாங்க நினைத்திருந்தவர்களுக்கும் இப்போது ஏற்ற காலமாக இருக்கிறது.

  • News18
  • Last Updated :
கொரோனா வைரஸால் முடங்கியிருந்த ஆட்டோ மொபைல் துறை, மெதுவாக இயல்பு நிலையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. கார் வாங்க நினைத்திருந்தவர்களுக்கும் இப்போது ஏற்ற காலமாக இருக்கிறது. ஏனெனில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சலுகைகளை கார் நிறுவனங்களும், கார்களுக்கு ஏற்றார்போல் குறைந்த வட்டியில் லோன்களை கொடுப்பதாக வங்கிகளும் அறிவித்துள்ளன. ஆனால், எந்த வங்கியில் உங்களுக்கு ஏற்றார்போல் குறைந்த வட்டியில் லோன் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்.

லோன் எடுக்க நினைப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

1. லோன் மூலம் கார் எடுக்க நினைப்பவர்கள், காரின் முழுத் தொகையில் குறைந்தது 20 விழுக்காடாவது செலுத்தி எடுக்க வேண்டும். சில வங்கிகள் 100 விழுக்காடு கடன் அளிப்பதாக கூறினாலும், இன்ஷியல் தொகையாக 20 விழுக்காடு தொகையை செலுத்துவது நல்லது. இல்லையென்றால், மாதாந்திர இ.எம்.ஐ தொகை செலுத்துவதில் அதிக சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

2. குறைந்த வட்டியில் சில வங்கிகள் லோன் கொடுத்தாலும், முறைமுகமாக பல அபராத தொகைகளை வசூலிப்பார்கள். உதாரணமாக, ஆவண கட்டணம், முன்கூட்டியே கட்டுவதற்கு விழுக்காடு அடிப்படையில் தொகை, தாமதமாக செலுத்துவதற்கு அபராத தொகை, பவுன்ஸ் தொகை என பல தொகைகளை வசூலிப்பார்கள். இதற்கு, நீங்கள் இ.எம்.ஐ கால்குலேட்டரை பயன்படுத்தி, எந்த வங்கியில் எவ்வளவு தொகை செலுத்துகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. மேலும், இந்த தொகைகளை மற்ற வங்கிகள் வசூலிக்கும் தொகையுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

3. கார் லோன் நீண்ட காலங்களுக்கு செலுத்த வேண்டும் என்பதால், லோன் எடுப்பதற்கு முன்பு உங்களின் நிதி நிலை குறித்து சிந்திக்க வேண்டும். குறைந்த காலத்தில் இ.எம்.ஐ செலுத்துவதன் மூலம் வட்டியில் நீங்கள் சேகரிக்கலாம். அதிக காலத்துக்கு இ.எம்.ஐ செலுத்தினால், அதிக தொகையை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். உங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப லோன் காலத்தை தீர்மானிப்பது நல்லது. முன்கூட்டியே லோன் கட்டி முடிக்கும்போது எந்த தொகையையும் வசூலிக்காத வங்கியை தேர்ந்தெடுக்கலாம்.

4. வங்கியில் லோன் எடுக்க திட்டமிடும்போது, வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் தங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கிறதா, திரும்ப செலுத்தும் வருவாய் வழிகள் ஆகியவற்றை வங்கிகள் கேட்கும்போது, சரியாக கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சில வங்கிகள் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன.

5. குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரம் மாத வருமானம் இருக்க வேண்டும். பேன் கார்டு, பாஸ்ட்போர்ட், ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டைகளில் ஒன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். கடைசி மூன்று மாத ஊதிய தொகை சான்று, வருமான வரி தாக்கல், கடைசி 6 மாத வங்கி பரிவர்த்தனை அறிக்கை ஆகியற்றை வைத்திருக்க வேண்டும்.

Also read... Explainer: ரெனால்ட்ஸ் Wrexham AFCயில் முதலீடு செய்த டெட்பூல் படத்தின் நடிகர் ரியான் - ஏன் தெரியுமா?

6. எலக்டிரிக் கார்கள் வாங்குபவர்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்பதால், தற்போது அந்த கார்களை லோன் மூலம் வாங்குபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. சுய தொழில் செய்பவர்கள் வணிக வாகனங்களை வாங்கினால் வருமானவரிச்சட்டம் 80சி - பிரிவு மூலம் வரி விலக்கு கோர முடியும்.

கார் லோன்களுக்கு வங்கிகளின் வட்டி விகிதம்

1. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா : 7.70 - 11.20%

2. இந்தியன் வங்கி : 7.65 - 8.15%

3. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி : 7.55%

4. ஐடிபிஐ வங்கி : 7.50 - 8.10%

5. ஜம்மு & காஷ்மீர் வங்கி : 7.95 - 8.70 %

6. பாங்க் ஆப் இந்தியா : 7.45 - 8.65 %

7. யூகோ வங்கி : 7.45 -7.70 %

8. கனரா வங்கி : 7.30 - 9.90 %

9. பாங்க் ஆப் மகாராஷ்டிரா : 7.30 - 8.80 %

10. பஞ்சாப் நேஷனல் வங்கி : 7.30 - 7.80 %

11. யூனியன் பேங்க் ஆப் இந்தியா : 7.15 - 7.50 %

12. பாங்க ஆ பரோடா : 7.10 - 10.10 %.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Loan

அடுத்த செய்தி