லாக் டவுனிலும் அமேசானில் அதிகம் OUT OF STOCK ஆன பொருள் என்ன தெரியுமா?

அமேசானில், உலகம் முழுவதும் தற்போது அதிகமாக ஆர்டர் செய்யப்படும் பொருள், டாய்லெட் பேப்பர், அவர்களுக்கு அமேசான் சொல்லும் பதில், Sorry OUT OF STOCK...

லாக் டவுனிலும் அமேசானில் அதிகம் OUT OF STOCK ஆன பொருள் என்ன தெரியுமா?
அமேசான்
  • Share this:
இந்தியாவை பொறுத்தவரை, இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலும்  'OUT OF STOCK'  ஆனவை காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவை தான்.

ஆனால் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பழக்கத்திற்கு தொடக்க புள்ளி வைத்த அமெரிக்கா தொடங்கி மற்ற சில நாடுகளில் OUT OF STOCK ஆனது எது தெரியுமா? ... டாய்லெட் பேப்பர்... ஆம், அமேசானில், உலகம் முழுவதும் தற்போது அதிகமாக ஆர்டர் செய்யப்படும் பொருள், டாய்லெட் பேப்பர், அவர்களுக்கு அமேசான் சொல்லும் பதில், Sorry OUT OF STOCK...

அமெரிக்காவில் கொரோனாவால் லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்கள், பெரும்பாலும் பொருட்களை இணையம் மூலமே வாங்கி வருகின்றனர்.


அமெரிக்காவில் மட்டுமல்ல, உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் இதே நிலை தான். இதன் காரணமாக, அமேசான் நிறுவனத்தின் இணையதளத்தில் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மார்ச் மாதம் சுமார் 65 சதவிதம் அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 250 கோடி மக்கள் உலக முழுவதும் அமேசான் இணையதளத்தில் பொருட்களை வாங்க வந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தேடியது.. டாய்லெட் பேப்பர் மற்றும் பேப்பர் டவல் தான்... ஆனால் அமேசானிடம் அவை out of stock.

இருப்பினும் இந்த காலகட்டத்தில் அமேசானின் விற்பனை 22 சதவிதம் அதிகரித்துள்ளது. விற்பனை அதிகரிப்பை ஈடு செய்ய, உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க அமேசான் முடிவு செய்த நிலையில், கொரோனா காரணமாக, தற்போது வேலையில் இருக்கும் ஊழியர்கள் பணிக்கு வர பயப்படுகிறார்கள்.இதனால், அமேசானில் வேலை செய்பவர்களுக்கு மட்டும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள புதிய பரிசோதனை கூடத்தையே அமேசான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. விற்பனையால் ஒருபுறம் லாபம் கிடைத்தாலும், தற்காப்பிற்காக அதை செலவு செய்ய வேண்டிய நிலையை கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ளது.
First published: April 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading