ஹோம் /நியூஸ் /வணிகம் /

இத்தாலியின் முன்னணி பிராண்டுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்

இத்தாலியின் முன்னணி பிராண்டுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்

காலணிகள், ஹேன்ட்பேக்குகள் மற்றும் பல்வேறு பொருள்களை இத்தாலியின் டாட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

காலணிகள், ஹேன்ட்பேக்குகள் மற்றும் பல்வேறு பொருள்களை இத்தாலியின் டாட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

காலணிகள், ஹேன்ட்பேக்குகள் மற்றும் பல்வேறு பொருள்களை இத்தாலியின் டாட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிராண்டிங் பிரிவான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட், உயர்தர லெதர் பொருள்களை விற்பனை செய்யும் இத்தாலியின் முன்னணி பிராண்டான டாட்(Tod' SpA) உடன் நீண்ட கால ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த டாட் நிறுவனம் 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. காலணிகள், ஹேன்ட்பேக்குகள் மற்றும் பல்வேறு பொருள்களை இந்த டாட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

  புதுடெல்லியில் உள்ள டிஎல்எப் எம்போரியோ, மும்பையில் உள்ள பெல்லாடியம், ஏஜியோ லூக்ஸ் ஆகிய இடங்களில் தனி பிராண்ட் ஷோரூமாக டாட் நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் உடன் சில்லறை வர்த்தகத்தில் கைகோர்த்துள்ள நிலையில், இந்திய சந்தைகளில் பிராண்டை வேகமாக கொண்டு சேர்க்கவும், அதை டிஜிட்டல் தளத்தில் பிரபலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குனர் தர்ஷன் மேத்தா கூறுகையில், 'புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டாட் பிராண்டில் புதுமையை புகுத்தி இந்திய சந்தையில் நிலை நிறுத்தவுள்ளோம். டாட் நிறுவனம் உலக அரங்கில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. இந்த பிராண்டின் தோற்ற அழகும், தரமும் சந்தையில் பிரத்தியேகமான பெயரை பெற்றுள்ளது' என்றார்.

  டாட் நிறுவனத்தின் மேலாளர் கர்லோ ஆல்பெர்டோ பிரெட்டா கூறுகையில், 'இந்தியாவின் முன்னணி ரிட்டெய்ல் நிறுவனமான ரிலையன்ஸ் உடன் இனைந்து செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் ஒரே விதமான பார்வை உள்ளதால் நாங்கள் இணைய முடிவு செய்தோம். இந்திய சந்தையில் நவீனமான, தரமான பொருள்களை தருவோம் என நாங்கள் நம்புகிறோம்' என்றார்.

  இதையும் படிங்க: புதிய வருமான வரி விதிகள் வரியை குறைக்க உதவுமா?

  ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. 2019ஆம் ஆண்டு குளோபல் ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்கி சர்வதேச சந்தையிலும் காலெடுத்த வைத்தது ரிலையன்ஸ். இந்த ஹாம்லேஸ் நிறுவனம் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Italy, Reliance Retail