Gold Rate | சற்று குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | சற்று குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 37,312 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

  • Share this:
    சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 37,312 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று மாலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 16 குறைந்து  ரூ. 4,675க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளி நேற்று மாலை  ரூ. 0.10 குறைந்து  ரூ. 72.40 விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலையும் தங்கம் விலை சற்று  குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4664 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.37,312 -க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 40,384 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 90 பைசா குறைந்து 71.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    மேலும் படிக்க...Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

    கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில்,  இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தும் விலை  ஏற்றத்துடனே தொடர்ந்து மூன்று நாட்களாக இருந்தது. இந்நிலையில் நேற்றும் இன்றும் விலை குறைந்த நிலையில் இன்று  சவரன் ரூ.37,312 -க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: