முகப்பு /செய்தி /வணிகம் / பெட்ரோல் லிட்டருக்கு ₹76.01-க்கு விற்பனை

பெட்ரோல் லிட்டருக்கு ₹76.01-க்கு விற்பனை

பெட்ரோல் நிலையம் மாதிரிப் படம்

பெட்ரோல் நிலையம் மாதிரிப் படம்

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து வருவது, வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.01 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.95 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்தது. 

2017ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சமீப காலமாக பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்துக்கொண்டே வந்தது. இதில் கடந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசலின் விலை ரூ.86-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.

தற்போது இதன் விலை படிப்படியாக குறந்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.01 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.95 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து வருவது, வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Also see... அரசியல் பேசும் திரைப்படங்கள்... சமூக அக்கறையா? வணிக நோக்கமா?

First published:

Tags: Diesel, Fuel Price, Petrol