ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate : தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate : தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate : சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 75 உயர்ந்து 4,740-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,920 க்கு விற்பனையாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்துள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால், கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதனால், சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 75 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரனுக்கு ஒரே நாளில் 600 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன்று வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் 70 காசுகள் உயர்ந்து 63 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோவுக்கு ஆயிரத்து 700 ரூபாய் அதிகரித்து 63 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தீபாவளியை முன்னிட்டு உயர்ந்துள்ள தங்கத்தின் விலை, இனி வரும் காலங்களில் சற்று குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Gold Price, Gold rate