ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | 3வது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | 3வது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate | சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து இன்று ரூ.39,400க்கு விற்பனை ஆகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு 208 ரூபாய் குறைந்துள்ளது.  தங்கம் விலை இன்று கிராமுக்கு 28 ரூபாயும், சவரனுக்கு 208 ரூபாயும் குறைந்துள்ளது.

    சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,925 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,951 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 39,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 208 ரூபாய் குறைந்து 39,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    Also see... தங்கம் விலை ஏன் குறைகிறது.. ஏறுகிறது... முடிவு செய்வது யார்?

    ஆனால் வெள்ளி விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 63.7 ரூபாயாக இருந்தது. இன்று அது ரூ.67.50 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Gold Price