கொரோனா காலத்தில் 41 நிறுவனங்களுடன் ரூ.30,664 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்து
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 41 நிறுவனங்களுடன் 30,664 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.

தமிழக அரசு தலைமைச் செயலகம்
- News18 Tamil
- Last Updated: July 25, 2020, 8:16 AM IST
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்யவும் தமிழக அரசு தொழில் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைப்பெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை உறுதி செய்தார்.
இந்தநிலையில், கொரோனா தொற்று உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக உலக பொருளாதாரம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. சில நாடுகள் தங்கள் தொழில் நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு மாற்ற முடிவெடுத்தன. இந்த முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்க தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் குழு, யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்காக சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தற்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் 17 தொழில் நிறுவனங்களுடன் மொத்தம் 15,128 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 20ம் தேதி 8 தொழில் நிறுவனங்களுடனும் 23ம் தேதி 16 தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதனால் 30,664 கோடி அளவிலான முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன.. இதன் மூலம் சுமார் 67,812 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்வதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளதாலும், தமிழக அரசு பல சலுகைகளை அளித்து சிறப்பான ஆதரவு அளிப்பதாலும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைப்பெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை உறுதி செய்தார்.
இந்தநிலையில், கொரோனா தொற்று உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக உலக பொருளாதாரம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. சில நாடுகள் தங்கள் தொழில் நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு மாற்ற முடிவெடுத்தன. இந்த முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்க தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் குழு, யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்காக சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.