Home /News /business /

தமிழக பட்ஜெட் 2022 : ''ஜி.எஸ்.டி நிலுவையால் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்''

தமிழக பட்ஜெட் 2022 : ''ஜி.எஸ்.டி நிலுவையால் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்''

TN Budget 2022

TN Budget 2022

TN Budget 2022 | தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
    பட்ஜெட் உரையில் அவர் பேசுகையில், 'அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியே இலக்கு. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

    இதையும் படிங்க - உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்.. 10 லட்சம் மனுக்கள் மீது தீர்வு - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளே இந்த அரசின் ஆணிவேராகும். ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள நேரிடும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் சுமார் 10 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது' என்று பேசினார்.

    இதையும் படிங்க - தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் : சட்டமன்றத்தில் அதிமுகவினர் கடும் அமளி

    முன்னதாக, திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பி.டி.ஆர். தனது உரையைத் தொடங்கினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்.

    ''சபாநாயகர் அமருங்கள் என கூறிய பின்னரும் 5 நிமிடங்கள் அவை நடவடிக்கையை நடத்த விடாமல் செய்தது நியாயம் தானா என எதிர்கட்சித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்'' என்று சாபாநாயகர் அவையில் எடுத்துரைத்தார்.

    இருப்பினும் அதிமுக உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர். அப்போது, அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து முழக்கம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Budget Session, TN Budget 2022

    அடுத்த செய்தி