21 இந்திய, உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 -23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசியதாவது-
தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலை நிறுத்திடவும் பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்.
அவரது சிந்தனைகளும், எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன. தனித்துவம் மிக்க அவரது முற்போக்கு சிந்தனையால் அனைவரையும் பயனடையச் செய்வது இந்த அரசின் கடமையாகும்.
இதையும் படிங்க -
தமிழக பட்ஜெட் 2022 : ''ஜி.எஸ்.டி நிலுவையால் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்''
இதனை நிறைவேற்றும் விதமாக உரிய அறிஞர் குழுவின் பரிந்துறைகளின்படி பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க -
தமிழக பட்ஜெட் 2022 : எந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விபரம்
இந்த நிதியாண்டில் இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 10,76,096 குறு, சிறு விவசாயிகளுக்கு 7, 428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும். நாட்டிலேயே முதல்முறையாக கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.