சிறு, குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் - தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவிப்பு

53 ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் பயனடையும் வகையில் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

சிறு, குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் - தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவிப்பு
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: June 4, 2020, 6:06 PM IST
  • Share this:
மத்திய அரசு அறிவித்துள்ள 'சுயசார்பு பாரதம்' திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், வணிகர்களுக்கும் கடன் வழங்கும் திட்டம் ஒன்றை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில். 'சுயசார்பு பாரதம்' திட்டத்தின் ஒரு பகுதியாக 3 லட்சம் கோடி ரூபாயை கூடுதல் கடனாக வழங்க மத்திய அரசு ஒதுக்கியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதியின்படி வணிகர்களின் வங்கி இருப்பு எவ்வளவு இருந்ததோ அதைவிட கூடுதலாக 20% கடன் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது.


இதன் மூலம் தங்களது வாடிக்கையாளர்களான 53 ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைவார்கள் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading