ஹோம் /நியூஸ் /வணிகம் /

டன் கணக்கில் தங்கம்.. ₹ 16,000 கோடி டெபாசிட்.. விப்ரோவையே ஓரம் தள்ளிய திருப்பதி.!

டன் கணக்கில் தங்கம்.. ₹ 16,000 கோடி டெபாசிட்.. விப்ரோவையே ஓரம் தள்ளிய திருப்பதி.!

திருப்பதி

திருப்பதி

வங்கிகளில் ரொக்க வைப்புத்தொகை மூலம் வட்டி வடிவில் ₹ 668 கோடிக்கு மேல் வருமானமாக தேவஸ்தானம் கணித்துள்ளது. மேலும், மலைக்கோயில் உண்டியில் காணிக்கையாக மட்டும் ₹ 1,000 கோடி வருமானம் வந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirupati |

ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே நிறுவனத்தை விட அதிக மதிப்பு கொண்ட இடமாக மாறியுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில். 

1933 இல் நிறுவப்பட்ட பின்னர் முதல் முறையாக திருப்பதி கோவிலின் மதிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி திருப்பதி கோவிலின் பேரில் வங்கிகளில் 10.25 டன் தங்க வைப்பு, 2.5 டன் தங்க நகைகள் , வங்கிகளில் சுமார் ₹ 16,000 கோடி டெபாசிட்கள் மற்றும் இந்தியா முழுவதும் 960 சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்த்து  கோவிலின்  நிகர மதிப்பு ₹ 2.5 லட்சம் கோடி (சுமார் 30 பில்லியன் டாலர்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை தரவுகளின்படி, தற்போதைய வர்த்தக விலையில், திருப்பதி கோவிலின் நிகர மதிப்பு பல முன்னணி இந்திய நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது.

பெங்களூரை தளமாகக் கொண்ட விப்ரோ வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ₹ 2.14 லட்சம் கோடியாக இருந்தது, அதே நேரத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் சந்தை மதிப்பு ₹ 1.99 லட்சம் கோடியாக இருந்தது. சுவிட்சர்லாந்தின் பன்னாட்டு உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லேவின் இந்திய யூனிட், ₹ 1.96 லட்சம் கோடியாக இருந்தது. இந்த அனைத்து நிறுவனங்களை  விடவும் திருப்பதி கோவில் சொத்து மதிப்பு என்பது அதிகம். 

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் மிதந்த பாதி எரிந்த 500 ரூபாய் நோட்டுகள்... போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மலைக் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் ரொக்கம், தங்க காணிக்கைகள் அதிகரிக்கும் அதன் வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் வங்கிகளில் நிலையான வைப்புகளும் அதிக வருமானத்தை ஈட்டுகின்றன என்று கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான அதன் பட்ஜெட்டில் சுமார் ₹ 3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது  , வங்கிகளில் ரொக்க வைப்புத்தொகை மூலம் வட்டி வடிவில் ₹ 668 கோடிக்கு மேல் வருமானமாக தேவஸ்தானம் கணித்துள்ளது. மேலும், மலைக்கோயில் உண்டியில் காணிக்கையாக மட்டும் ₹ 1,000 கோடி வருமானம் வந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் புது தில்லி ஆகிய மாநிலங்களில் ஏராளமான கோயில்களை திருப்பது கோவில் தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Tirumala Tirupati, Tirupati temple