முதன்முதலில் இப்பதான் கிரெடிட் கார்டு வாங்குறீங்களா ? அப்ப இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..

முதன்முதலில் இப்பதான் கிரெடிட் கார்டு வாங்குறீங்களா ? அப்ப இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..

கிரெடிட் கார்ட்

நீங்கள் முதல் கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கும் போது தெரிந்துக்கொள்ள வேண்டிய விவரங்கள் இவை தான்.

  • Share this:
நாம் கிரேடிட் கார்டுகளை வாங்குவதற்கான முக்கிய காரணம், திடீர் செலவுகளுக்காகப் பிறரிடம் கடன் கேட்கும் நிலையைத் தவிர்க்கவும், பர்ஸை பதம் பார்க்கும் செலவுகளைத் தடுக்கவும், பெற்ற கடனை செலுத்த போதுமான கடன் இருப்பதால் தான் விரும்பி வாங்குகிறோம். இது ஏறக்குறைய ஒரு ஷாப்பிங் லோனைப் போலத்தான். ஒரு குறிப்பிட்டத் தேதிக்குள் செலுத்தி விட்டால் வட்டி கூட கட்டத் தேவையில்லை.

கிரெடிட் கார்டுகள்  சக்திவாய்ந்த நிதிக் கருவிகளாகும், அவை கவனமாகப் பயன்படுத்தப்படும்போது, வலுவான கடன் வரலாற்றை உருவாக்க கதவுகளைத் திறக்கலாம். ஆனால் ஒருவர் எப்படி தனது முதல் கிரெடிட் கார்டைப் பெறுவது? உங்கள் முதல் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விவரங்கள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

கிரெடிட் கார்டு பெற வயதும் ஒரு முக்கியமான தகுதியாக பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 70 வயது வரை அனுமதிக்கப்படும். இதிலும், நிறுவனத்துக்கு ஏற்ப வித்தியாசங்கள் உண்டு. சில நிறுவனங்கள் 60 வயது வரை மட்டுமே கிரெடிட் கார்டு தருகின்றன. ஆனால், மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் வித்தியாசம் கிடையாது.

உங்கள் முதல் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது கடினமான வேலை தான். தொழில்துறையில் அணுகக்கூடிய டன் கிரெடிட் கார்டுகளும் அவற்றின் துஷ்பிரயோகம் குறித்த பல பயமுறுத்தும் கதைகளும் நம்மிடையே உள்ளன. நிதி நன்மைகளை பெறுவதற்கு உங்கள் புதிய கார்டை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதை அறிய இந்த உள்ளடக்கத்தை படியுங்கள்.

இந்தியாவில் பல வகையான கிரெடிட் கார்டுகள் உள்ளன. அதில் சரியானதை நீங்கள் அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, உங்களுக்கு கிரெடிட் கார்டுகளைப் பற்றி அறிமுகமில்லாவிட்டால் மலிவான வருடாந்திர கட்டணத்துடன் புதிய நிலை கிரெடிட் கார்டுக்கு செல்லலாம்.  உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனை உறுதிப்படுத்த, கிரெடிட் கார்டு வழங்குநர்கள் உங்கள் வருமான விவரங்களைக் கோரலாம். நீங்கள் கிரெடிட் கார்டைக் கையாளப் பழகியவுடன் கடன் வழங்குநர்கள் உங்கள் கடன் வரம்பை அதிகரிக்கும் வாய்ப்பை அனுமதிப்பார்கள். கிரெடிட் கேப் உங்கள் வருவாயுடன் தொடர்புடையது, அதாவது உங்களிடம் குறைந்த வருமான ஆதாரம் இருந்தால் உங்கள் கடன் வரம்பை உங்கள் வருவாயால் ஈடுசெய்ய முடியும்.

கிரெடிட் கார்டு வாங்கும் முன்னர் நினைவில் கொள்ள வேண்டியவை:

இப்போது இந்தியாவில் சூப்பரான கிரெடிட் கார்டு என்று எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் பின்வரும் காரணிகள் அடிப்படையில் சந்தையில் உள்ள கிரெடிட் கார்டுகளை ஒப்பிடுவதன் மூலம், நீங்களே உங்களுக்கு உகந்த ஒரு கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யலாம்.

சேர்க்கை கட்டணம்:

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரலாறு என கருதப்பட்ட நிகழ்வு மாறி இப்போது அது நிகழ்வுக்கு வந்துவிட்டது. அந்த நிகழ்வுகள் 2010க்கு பிறகு பரவலாக தெரிய ஆரம்பித்தது. சந்தையில் உள்ள பல கார்டுகளுக்குச் சேர்க்கை கட்டணம் என்று எதுவும் இல்லை. எனினும் நீங்கள் ஒரு கிரெடிட் கார்டு வாங்கும் முன்னர் அதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள்.

வருட கட்டணம்:

கிரெடிட் கார்டுகளுக்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டிற்கு உரியக் கட்டணத்தை செலுத்த வேண்டும். நீங்கள் இலவச கிரெடிட் கார்டு என்கிற சொல்லை எங்கேனும் கண்டால் அது பொதுவாக இலவச சேர்க்கை கட்டணம் மற்றும் இலவச முதலாமாண்டு கட்டணத்தைக் குறிக்கும். நீங்கள் 2ம் ஆண்டு முதல் ஆண்டு கட்டணத்தை செலுத்த வேண்டும். எனவே இதை நன்றாக நினைவில் நிறுத்திக் கொண்டால் பின்னாட்களில் வரும் குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.

வட்டியில்லா கடன் காலம்:

கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அபராதம் வசூலிக்க வாய்ப்புகள் உள்ளது.

மினிமம் தொகை:

மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம் கணக்கிடப்படும்.

பணமாக எடுத்தல்:

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்டணமாக இருக்கும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35% முதல் 40% என்கிற அளவில் இருக்கும்.

கேஷ் பாயிண்ட்ஸ்:

கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. ரூ. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.

திரும்ப ஒப்படைப்பது:

கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.

CIBIL எச்சரிக்கை:

நவீன வசதிகள் நமது வாழ்க்கைத் தரத்தை மாற்றலாம், ஆனால் அதை கையாளுவதில் சாமர்த்தியமும், புத்திசாலித்தனமும் வேண்டும். கடனைக் கட்டாமல் சிக்கல் ஏற்படுத்தினால் நமது பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். அது பிற வகையில் நமது கடன் வாங்கும் மதிப்பைக் குறைத்து விடும். தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிடும்போது சிக்கலாகிவிடும்.

EMI வசதி:

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக (EMI) திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.

கடன் அளவு:

நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் 3 மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம் அல்லது திரும்ப அளித்து விடலாம்.

ஆஃபர்கள்:

பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் 5 % முதல் 10% வரை கேஷ் பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தெளிவு வேண்டும். பண்டிகை கால போனஸ் கிடைத்து அதை பில்லிங் தேதியில் கட்டிவிட முடியும் என்றால் துணிந்து வாங்கலாம். ஆனால் போனசை செலவு செய்துவிட்டு பண்டிகை ஆஃபர்களில் அள்ளினால் சிக்கல்தான்.

வருமானத்தை செலவு செய்கிறோம்:

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்.தேவை என்ன என்பதைப் பொறுத்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஓகே சொல்லவும். கிரெடிட் கார்டு வாங்கும்போது கூடவே சில சலுகை கொடுக்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லலாம். ஆனால் அவசியமிருந்தால் மட்டுமே உடன்படவும்.

ஒரு வருட மருத்துவக் காப்பீடுக்கு அனுமதி கொடுத்திருப்போம். ஆனால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அறிவிக்காமலேயே பணத்தை பிடித்திருப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பொருளாதார நிலைமை குறித்து கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆஃப்ஷன்களில் தெளிவு வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவதை விட குறைவான வட்டியில் கிடைக்கும் தனி நபர் கடன்களைக் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.

அதுவுமில்லாமல், கிரெடிட் கார்டு கடன்களில் சேவை மற்றும் செயலாக்க கட்டணங்கள் மிக அதிகம். ஆக, இவை அனைத்தையும் மனதில் நிறுத்தி, நம்முடைய தேவைக்கு ஏற்ற கடனை எவ்வகையில் பெறுவது என முடிவு செய்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: