இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு (credit card ) என்று சொல்லப்படும் கடன் அட்டை பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. இன்றைய சமூகம் EMI ஐ கலாச்சாரத்தில் மூழ்கிவிட்ட நிலையில் கிரெடிட் கார்டுகளுக்கான தேவை, பயன்பாடு என்பதும் அதிகரித்துவிட்டது. மேலும் அதன் பயனர்களை ஊக்குவிப்பதற்காக கிரெடிட் கார்டு நிறுவனங்களும் பல சலுகைகளை வழங்குகின்றனர்.
ஷாப்பிங் தளங்களில் கூட கிரெடிட் கார்டுக்கு சலுகை உள்ளது. அதேபோல நீங்கள் செய்யும் ஒவ்வொரு பர்சேஸ்சுக்கும் உங்கள் கிரெடிட் கார்டில் ரிவார்ட் புள்ளிகள் சேரும். அதற்கும் சலுகைகள் உண்டு. அப்படி வரும் கிரெடிட் கார்டு சலுகைகளை எவ்வாறு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது? அதன் மூலம் எப்படி அதிக லாபம் ஈட்டுவது என்பதைத்தான் இன்று உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்….
இந்த கொரோனா காலம் என்பது கிரெடிட் கார்டுகளுக்கு ஒரு சொர்க்க காலம் என்றே சொல்லலாம். இந்த காலத்தில் மக்களின் செலவுகள் மற்றும் ஷாப்பிங் முறைகள் உட்பட, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் மாறிவிட்டது. அதன் போக்கில் கிரெடிட் கார்டு பயன்பாடும் உச்சம் தொட்டது. 2022 செப்டம்பரில் கிரெடிட் கார்டு செலவினம் அதிகபட்சமாக ரூ.1.22 லட்சம் கோடியைத் தொட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
பேஸ்லைன்(baseline) முதல் பிரீமியம்(premium) வரை - கிரெடிட் கார்டுகளில் பல வகைகள் உண்டு. கார்டு வகையைப் பொறுத்து ரிவார்டு புள்ளிகளின் மதிப்பும், புள்ளிகளை மீட்டெடுப்பதும் வங்கிக்கு வங்கி கணிசமாக வேறுபடுகிறது. ஆனால், பல முதல்முறை கிரெடிட் கார்டு பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகளைப் பயன்படுத்துவதற்கான உகந்த வழியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கான செய்தி தான் இது.
ரிவார்டு புள்ளிகளை எவ்வாறு பெறுவது: ஒவ்வொரு முறை பொருட்களை வாங்குவதற்கு கார்டை ஸ்வைப் செய்யும் போதும் கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகள் தானாகவே பெறப்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கிரெடிட் கார்டில் செலவழித்த ஒவ்வொரு ரூ.100 முதல் ரூ.250க்கும் ஒரு புள்ளி சேர்க்கப்படும். கூடுதலாக, உங்கள் பொருளின் மதிப்பு மற்றும் வகையை பொறுத்து, அதிக புள்ளிகளைப் பெறுவீர்கள்.
உங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளின் பலன்களை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பதற்கான சில குறிப்புகள் இங்கே:
உங்கள் கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட முதல் 90 நாட்களுக்குள் நீங்கள் பணம் செலவழித்தால், சில வங்கிகள் உங்களுக்கு வரவேற்பு புள்ளிகளை (welcome points) வழங்குகின்றன. அதோடு அந்த காலகட்டத்தில் கிரெடிட் கார்டின் பார்ட்னர் ஸ்டோர்களில் ஷாப்பிங் செய்தல், சாப்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு போன்ற குறிப்பிட்ட வகைகளில் செலவு செய்வது, விரைவான வெகுமதி புள்ளிகளைப் பெற உதவுகிறது.
இந்த கல்யாண சீசனில் திருமண தம்பதிகளுக்கு பொருளாக வாங்கி கொடுக்காமல், உங்கள் கிரெடிட் கார்டு மூலம் இ-வவுச்சர்கள் அல்லது கிஃப்ட் கார்டுகளை வழங்கலாம். இதனால் தம்பதிகள் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்வதோடு வவுச்சர் கொடுத்த உங்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படும்.
இதையும் படிங்க: EPFO அதிக ஓய்வூதியத் திட்டம்... விண்ணப்பிக்கும் காலவரம்பு நீட்டிப்பு.. முழு விவரம்..!
அதேபோல உங்கள் ரிவார்டு புள்ளிகள் எப்போது காலாவதியாகின்றன என்பதை அறிந்து, அதற்கு முன் அவற்றை பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். பெரும்பாலான வங்கிகள் ரிவார்டு புள்ளிகளைக் கண்காணிப்பதற்கும், போர்ட்டல் அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிலிருந்து கொள்முதல் செய்வதற்கும் பிரத்யேக போர்ட்டலை வழங்குகின்றன. நீங்கள் ஷாப்பிங் செல்லும்போது, விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும்போது , இதைத் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேக்மைட்ரிப் - ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு போன்ற இணை முத்திரையிடப்பட்ட பயணக் கடன் அட்டையானது , வழக்கமான கிரெடிட் கார்டை விட விமானம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளில் அதிக புள்ளிகளைப் பெறும். இதுபோன்ற கோ-பிராண்டட் கார்டுகளைத் தேர்வுசெய்து, குறிப்பிட்ட வகைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், அதிகபட்ச பலன்களைப் பெற முடியும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Credit Card, Offer