ஹோம் /நியூஸ் /வணிகம் /

வீடு அல்லது நிலம் வாங்க போறீங்களா? இதை கவனிக்க மறந்துடாதீங்க..

வீடு அல்லது நிலம் வாங்க போறீங்களா? இதை கவனிக்க மறந்துடாதீங்க..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நான்காவதாக ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் பெறுவது அவசியம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினருக்கும் சொந்தமாக நிலம் வாங்குவதும், அங்கு வீடு கட்டி குடியேறுவதும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கு மிக அதிகமான உழைப்பும், அதிகமான பணமும் கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு நிலமோ அல்லது வீடோ வாங்கிய பிறகு, அதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் அது மிகப்பெரும் இழப்பாக இருக்கும்..

  எனவே ஒரு வீடு அல்லது நிலத்தை நீங்கள் பதிவு செய்வதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை உறுதி செய்ய வேண்டியது அவசியம். இன்றைய ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவை எதிலும் நீங்கள் மாட்டாமல் உங்களது நிலம் அல்லது வீட்டை எந்த பிரச்சினையும் இன்றி சுமூகமாக பதிவு செய்து சந்தோஷமாக குடியேறுவதற்கு சில முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.

  Read More : கடைசி வாய்ப்பு.. லாபம் கொட்டும் அரசு வங்கியின் சிறப்பு திட்டம் முடிவுக்கு வருகிறது!

   சொத்துக்களை பதிவு செய்வதற்காக இந்தியாவில் 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே சொத்தானது பதிவு செய்யப்படும் பொழுது அதனுடைய அனைத்து தரவுகளும், அதனை பற்றி விவரங்களும் சரியாக கணக்கிடப்பட்டு கோப்புகளில் வைக்கப்பட வேண்டும் என்பதே.

  ஒருவேளை நீங்கள் வீடு வாங்குவதாக இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள இந்த விஷயங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  முதலில் ஒரு நிலம் அல்லது வீட்டை வாங்குவதற்கு முன்பு அதனை பற்றிய வரலாறை ஆராய்வது அவசியம். இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஏதேனும் வழக்கறிஞரை அணுகி, அந்த நிலத்திற்கான வரி வில்லை ஆகியவற்றை பற்றி விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் உங்களால் ஒரு குறிப்பிட்ட நிலம் அல்லது வீட்டின் 30 வருட வரலாறை பற்றி தெரிந்து கொள்வதற்கும் சட்டத்தில் வழி உண்டு. நிலம் விற்கும் விற்பனையாளர் அல்லது தரகர் ஆகியவரிடமிருந்து சரியான பத்திரங்களை பெற்று அவற்றை சரி பார்த்துக் கொள்வதும் அவசியம்.
  இரண்டாவதாக நீங்கள் வாங்க இருக்கும் சொத்தை பற்றிய விவரங்களை உள்ளூர் செய்தித்தாளில் விளம்பரம் செய்யலாம். ஒரு வேலை அந்த நிலத்தில் ஏதாவது பிரச்சனை இருப்பின் அதை பற்றிய நீங்கள் தெரிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். ஒருவேளை எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தாலும் நீங்கள் ஏற்கனவே விளம்பரம் செய்த இந்த செய்தி தான் ஒரு ஆதாரமாக உங்களுக்கு உதவக் கூடும்.
  மூன்றாவதாக பவர் ஆஃப் அட்டார்ணி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பவர் ஆஃப் அட்டார்னி என்பது நிலத்தின் அல்லது ஒரு சொத்தின் உரிமையாளர் அதனை நிர்வகிக்கும் பொறுப்பை வேறு ஒருவருக்கு முழுமையாக ஒப்படைத்து இருப்பார். இன்றைய ரியல் எஸ்டேட் சந்தையில் இந்த முறையை பயன்படுத்தி பல்வேறு வித ஏமாற்று வேளைகள் நடந்து வருகின்றன. எனவே நீங்கள் வாங்க போகும் சொத்தின் உரிமை யாரிடம் உள்ளது என்பதை ஒரு முறை அல்லது இரண்டு முறை சரி பார்த்துக் கொள்வது அவசியம். இதற்கான உதவியை நீங்கள் வழக்கறிஞரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  நான்காவதாக ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் பெறுவது அவசியம். என்ஓசி எனப்படும் இந்த சான்றிதழ் பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் அந்த சொத்திற்கான வரி செலுத்தப்பட்ட சீட்டுகளை கேட்டு பெற்று அவற்றை சரிபார்த்துக் கொள்வதும் அவசியமான ஒன்று.
  கடைசியாக ஒரு சில நேரங்களில் உங்களுக்கு வங்கிகளின் உதவி தேவைப்படலாம். நீங்கள் வங்கியில் இருந்து சொத்து வாங்குவதற்காக கடன் பெறும் பொழுது, வங்கியில் மேலே கூறியவற்றில் சில பத்திரங்கள் வங்கியின் சார்பில் கேட்கப்படும் இந்த பத்திரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு கடன் கொடுக்க வங்கி முன் வரும். ஒருவேளை உங்களுக்கு கடன் கொடுக்க வங்கி மறுத்து விட்டால், அந்த நிலத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம்
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Business, Home Loan, Land Documents, Tamil Nadu