ஹோம் /நியூஸ் /வணிகம் /

30 வயது.. தூக்கத்திலேயே உயிரிழந்த இளம் தொழிலதிபர்.. ஷாக்கில் மருத்துவ உலகம்!

30 வயது.. தூக்கத்திலேயே உயிரிழந்த இளம் தொழிலதிபர்.. ஷாக்கில் மருத்துவ உலகம்!

டியன்டியன் குல்லாண்டர்

டியன்டியன் குல்லாண்டர்

Tiantian Kullander: அவர் தனது புத்திசாலித்தனம், இரக்கம், பணிவு, கடின உழைப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றால் ஒரு சிறந்த முன்மாதிரியை அமைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆம்பர் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் கீப்பர்டிஏஓவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான டியன்டியன் குல்லாண்டர் காலமானார்

ஆம்பர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, குழுமத்தின் இணை நிறுவனர் டியான்டியன் குல்லாண்டர், நவம்பர் 23 அன்று தனது தூக்கத்திலேயே உயிர் இழந்ததாக கூறியுள்ளது. டியன்டியனுக்கு வயது 30. அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

டியன்டியன் குல்லாண்டர் யார்?

TT என புனைபெயர் பெற்ற டியான்டியன் குல்லாண்டர், 2017 ஆம் ஆண்டில் ஆம்பர் நிறுவனத்தை நிறுவுவதற்கு உதவியதோடு, சுமார் $3 பில்லியன் மதிப்பிலான நிதி திரட்டும் மதிப்பைக் கொண்ட ஒரு பயனுள்ள கிரிப்டோ சந்தை தயாரிப்பாளராக அதை வளர்த்தார். பல அம்பர் இணை நிறுவனர்களைப் போலவே கோல்ட்மேன் சாச்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகிய வர்த்தகத்தில் அனுபவம் பெற்றிருந்தார்.

இதையும் படிங்க : உலகப் பிரச்னையாக உருவெடுத்த வேலை இழப்பு… பதற்றத்தில் பொறியாளர்கள்..

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட கிரிப்டோகரன்சி நிறுவனமான ஆம்பர் குழுமத்தின் இணை நிறுவனர் என்ற பொறுப்பை தவிர , e-sports நிறுவனமான Fnatic இன் குழுவில் போர்ட் மெம்பராக டியான்டியன் இருந்துள்ளார். KeeperDAO கீப்பர்டிஏஓவை என்ற நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.

வணிகத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் அவர் தனது உழைப்பை முதலீடு செய்தார். அவர் தனது புத்திசாலித்தனம், இரக்கம், பணிவு, கடின உழைப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றால் ஒரு சிறந்த முன்மாதிரியை அமைத்தார்.

டியன்டியன் குல்லாண்டர் மரணத்திற்கு காரணம்

அவர் தூக்கத்தில் நிம்மதியாக இறந்ததாக ஆன்லைன் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இளம் வயதிலேயே அவர் உயிரிழப்புக்கு என்ன காரணமோ என மருத்துவ உலகம் ஷாக்கில் உள்ளது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

First published:

Tags: Cryptocurrency