Home » News » Business » THOUSANDS PROTEST CLOSURE OF FORD FACTORIES IN BRAZIL MUT

ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதிர்ச்சி- பிரேசிலில் வெடித்தது போராட்டம்

ஏற்கெனவே கொரோனாவினால் கடும் பொருளாதாரத் துயரத்தைச் சந்தித்து வரும் பிரேசிலில் வேலையின்மை கடும் உச்சத்துக்குச் சென்றுள்ளது, இப்போது ஃபோர்டு மூடல் செய்தி அணுகுண்டாக விழுந்துள்ளது.

ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதிர்ச்சி- பிரேசிலில் வெடித்தது போராட்டம்
பிரேசிலில் போராட்டம்.
  • Share this:
பிரேசிலில் அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு தன் 3 தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்ததால் வடகிழக்கு பிரேசிலில் உள்ள கேமகாரி தொழிற்சாலையின் முன்பாக முகக்கவசத்துடன் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிற்சாலை மூடலால் 5,000 பேர் வேலையிழந்தனர். இதனையடுத்து கேமகாரி தொழிற்சாலை முன்பு 3000 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16 ஆண்டுகளாக ஃபோர்டு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பிலிப் மாண்ட்டீரோ என்பவர், இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லப்படுவோம், என்றார்.


கொரோனா வைரஸ் கொடுந்தொற்று நோய் பாதிப்பினால் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் இந்த 3 தொழிற்சாலைகளையும் உடனடியாக மூடியதாக ஃபோர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் நூறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஹெவி ட்ரக் வர்த்தகத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது, மேலும் சில நஷ்டம் ஏற்படுத்திய வர்த்தகங்களை ஃபோர்டு ஏற்கெனவே மூடியும் கொரோனாவினால் ஏற்படும் இழப்பிலிருந்து மீள முடியவில்லை.

ஆனால் பிரேசில் அதிபர் போல்சொனாரோ ’நிறுவனம் பொய் சொல்கிறது’ என்று சாடியுள்ளார். “ஃபோர்டு உண்மையைக் கூற மறுக்கிறது, அவர்களுக்கு மானியம் வேண்டும் என்பதே உண்மை தொடர்ந்து நாங்கள் 3.6 பில்லியன் டாலர்கள் அவர்களுக்கு அளிக்க வேண்டுமா என்ன? முடியாது.” என்றார்.2020-ல் பிரேசிலில் ஃபோர்டு கார் விற்பனை 26% சரிவு கண்டது. கார் விற்பனை 28.57%, மற்றும் பேருந்துகள் விற்பனை 33% சரிவு கண்டன.

ஏற்கெனவே கொரோனாவினால் கடும் பொருளாதாரத் துயரத்தைச் சந்தித்து வரும் பிரேசிலில் வேலையின்மை கடும் உச்சத்துக்குச் சென்றுள்ளது, இப்போது ஃபோர்டு மூடல் செய்தி அணுகுண்டாக விழுந்துள்ளது.

கொரோனாவுக்கு பிரேசிலில் 203,000 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: January 13, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading