தாம்ஸ் குக் ட்ராவல்ஸ் நிறுவன வீழ்ச்சியால் இந்தியாவுக்கு என்ன நஷ்டம்..?

தாமஸ் குக் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவுக்கான ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கும்.

தாம்ஸ் குக் ட்ராவல்ஸ் நிறுவன வீழ்ச்சியால் இந்தியாவுக்கு என்ன நஷ்டம்..?
தாமஸ் குக்
  • News18
  • Last Updated: September 24, 2019, 9:02 PM IST
  • Share this:
பிரிட்டனின் ட்ராவல்ஸ் நிறுவன ஜாம்பவான் ஆன ‘தாமஸ் குக்’ நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

பெரும் நஷ்டத்தால் மூடப்பட்ட தாமஸ் குக் நிறுவன வீழ்ச்சியின் தாக்கம் இந்திய சுற்றுலாத்துறையைப் பெரிதும் பாதித்துள்ளது. தற்போதைய சூழலில் மட்டுமல்லாது அடுத்த சில மாதங்களுக்கும் தாமஸ் குக் வீழ்ச்சியின் தாக்கம் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

பிரிட்டன் ட்ராவல்ஸ் நிறுவனமான தாமஸ் குக் மூலம் பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த அதிக சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவது வழக்கம். மேற்குறிப்பிட்ட வெளிநாட்டு சுற்றுலா விரும்பிகளுக்கு இந்தியா என்றால் தாமஸ் குக் ட்ராவல்ஸ்தான் என்றிருந்த நிலையில் நிச்சயம் இந்தியாவுக்கான சுற்றுலா வருவாய் குறையும் என்கின்றனர் உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள்.


இந்திய சுற்றுலா வருவாயில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் 8.01 சதவிகிதம் ஆகும். ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளில் ஜெர்மனிய மக்கள் அதிக வருவாய் தருகின்றனர். 2018 ஆகஸ்ட் மாதத்தைவிட 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 சதவிகிதம் அதிகரித்திருந்தது.

ஆனால், தாமஸ் குக் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவுக்கான ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கும். பிரிட்டனில் தாமஸ் குக் நிறுவனம் திவால் ஆனாலும் இந்தியாவில் தனி நிர்வாகத் தலைமையின் கீழ் தாமஸ் குக் இந்தியா செயல்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: பொருளாதாரத்தை மேம்படுத்த கார்ப்ரேட் வரி குறைப்பு - வரலாற்றுச் சாதனை என மோடி புகழாரம்!EXCLUSIVE மதுரை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்...
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்