ஒரு நாளைக்கு ரூ.7 டெபாசிட் செய்தால் போதும், மாதம் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம்

மாதிரிப் படம்

இது முக்கியமாக அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது

  • Share this:
மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 60 வயதிற்குப் பிறகு மாத ஓய்வூதியம் வழங்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.7 டெபாசிட் செய்யும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 வரை ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான தகுதி என்ன?

18 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் தங்களது வங்கிக் கணக்குடன், இந்த திட்டத்தின் பதிவு படிவத்தை பூர்த்தி செய்யலாம். மேலும் திட்டத்தின் நன்மைகளைப் பெற, தனிநபர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், வங்கி நுகர்வோர் 20 வருட காலத்திற்கு தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின் பிற விவரங்கள்:

இந்த அரசாங்கத் திட்டத்தில் நீங்கள் விரைவில் முதலீடு செய்யத் தொடங்கினால், அதிக நிதி உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். ஒரு நபர் தனது 18 வயதில் APY இன் சந்தாதாரராக மாறினால், அவர் 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியத்தைப் பெற மாதத்திற்கு ரூ.210 அல்லது ஒவ்வொரு நாளும் ரூ.7 டெபாசிட் செய்ய வேண்டும்.

Also Read : உங்க பிஎஃப் பேலன்ஸை ஈஸியா தெரிஞ்சுக்கலாம் - அதுக்கு நீங்க என்ன பண்ணனும்னு தெரியுமா?

இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்யும் நபர்கள் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு அளவில் ஓய்வூதியங்களைப் பெரும் வகையில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்யக்கூடிய விருப்பங்கள் பல உள்ளன. அதன்படி இந்த திட்டத்தின் கீழ், 60 வயதிற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 மாத ஓய்வூதியம் பெற மாதத்திற்கு ரூ.42 மட்டுமே டெபாசிட் செய்யப்பட வேண்டும். இதேபோல், ஒவ்வொரு மாதமும் ரூ.2000 ஓய்வூதியம் பெற, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.84 டெபாசிட் செய்ய வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு மாதமும் ரூ.3000 பணத்தை ஓய்வூதியமாக பெற நினைத்தால் ரூ.126 டெபாசிட் செய்ய வேண்டும். இதுதவிர மாத ஓய்வூதியம் ரூ .4,000 பெற விரும்பினால் ஒருவர் தனது வாங்கி கணக்கில் ரூ.168 டெபாசிட் செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திட்டத்தின் கீழ் நாமினி வசதியும் கிடைக்கிறது. இந்த வசதி மூலம் பென்ஷன் திட்டத்தை கொண்டுள்ள சந்தாதாரர் ஏதேனும் ஒரு காரணத்தால் உயிரிழக்க நேர்ந்தால், பென்சன் பணத்தை நாமினேஷன் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பெறுவார்கள். பரிந்துரைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் டெபாசிட் செய்யப்பட்ட தொகை மற்றும் ஓய்வூதிய சலுகைகளை கோர உயிரிழந்த சந்தாதாரரின் வங்கியை அணுக வேண்டியிருக்கும்.
Published by:Vijay R
First published: