முகப்பு /செய்தி /வணிகம் / ஒருமுறை முதலீடு.. வட்டியுடன் சேர்த்து மாதத் தவணைகளில் கிடைக்கும் பணம்.. SBI-யின் அசத்தலான டெபாசிட் திட்டம்..!

ஒருமுறை முதலீடு.. வட்டியுடன் சேர்த்து மாதத் தவணைகளில் கிடைக்கும் பணம்.. SBI-யின் அசத்தலான டெபாசிட் திட்டம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

முதலீட்டாளர்கள் முதலீடு செய்த முதல் மாத முடிவில் (29, 30 அல்லது 31 தேதிகளில்) இல்லாவிட்டால், அடுத்த மாதத்தின் முதல் நாளில் வங்கியிடமிருந்து தொகையை திரும்பப் பெற தொடங்குவார்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நல்ல வருமானத்தை ஈட்ட பல திட்டங்கள் மற்றும் ஃபினான்ஷியல் ப்ராடக்ட்ஸ்கள் உள்ளன. பல இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சி மற்றும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கி இருக்கிறது.

எனவே ஒரே வருமானத்தை மட்டுமே நம்பி உள்ளவர்களின் நிலை மோசமாக உள்ளது. இது போன்ற நிலையற்ற காலங்களில் வழக்கமான மற்றும் நிலையான மாத வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய லாபகரமான முதலீட்டு திட்டங்களை மக்கள் தேடுகின்றனர். அந்த வகையில் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வழங்கும் அற்புதமான மாத வருமான திட்டம் ஒன்றை பற்றி இங்கே பார்க்கலாம். SBI-யின் ஆன்யூட்டி டெபாசிட் ஸ்கீம் (Annuity Deposit Scheme) அதாவது வருடாந்திர டெபாசிட் திட்டம் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

Annuity Deposit என்றால் என்ன?

இந்த Annuity Deposit திட்டத்தின் கீழ் ஒரு வாடிக்கையாளரால் ஒரு மொத்த தொகை டெபாசிட் செய்யப்படும். டெபாசிட் நிதியாக முதலீடு செய்யும் தொகையை வட்டியோடு சேர்த்து மாத தவணைகளில் குறிப்பிட்ட தொகையை முதலீட்டாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கி வருகிறது. அதாவது இந்த திட்டம் முதலீட்டாளர்கள் தங்கள் ஆரம்ப வைப்பு தொகைக்கு ஈடாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மாதாந்திர தொகையை EMI-க்களில் வட்டியுடன் பெற அனுமதிக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்து மாதத் தவணைகளாக பெற்று கொள்ளலாம். இந்த மாத தவணையில் ஒருவர் டெபாசிட் செய்த அசல் தொகைக்கான வட்டியும் சேரும் என்பதால் Annuity Deposit சிறந்த முதலீட்டு ஆப்ஷனாக பார்க்கப்படுகிறது.

Read More : உங்களின் கிரெடிட் கார்டு அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்டு விட்டதா.! பிரபலமான இந்த BNPL ஆப்ஷன்களை ட்ரை பண்ணலாமே

எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். நீங்கள் முதலீடு செய்த தொகைக்கான வட்டியுடன் வங்கி உங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட தொகையை நிலையான மாதாந்திர தவணையில் திருப்பி செலுத்துகிறது.

இது ரெக்கரிங் டெபாசிட்டிலிருந்து வேறுபட்டதா..?

ஆம். Recurring deposit அதாவது RD-ஐ பொறுத்த வரை ஒரு வாடிக்கையாளர் தவணைகளில் பணம் செலுத்துகிறார் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட மெச்சூரிட்டி பீரியட்டின் போது முதிர்வு தொகையைப் பெறுகிறார். ஆனால் Annuity Deposit திட்டத்தில் வங்கி ஒரே ஒரு முறை டெபாசிட்டை ஏற்கிறது. டெபாசிட் தொகை மற்றும் அசலை குறைப்பதற்கான வட்டி ஆகியவை வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட காலக்கெடுவில் தவணை முறையில் வாடிக்கையாளருக்கு வங்கியால் திருப்பி செலுத்தப்படுகிறது.

FD-யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது..?

FD-ல் வாடிக்கையாளர்கள் ஒரு முறை டெபாசிட் செய்து மெச்சூரிட்டி தேதியில் முதிர்வு தொகையை பெறுவார்கள். இது முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மெச்சூரிட்டி தேதி வரை வழக்கமான சேவிங்ஸ் அக்கவுண்ட்டை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரே முறை தான் பணத்தை போடுவீர்கள். மெச்சூரிட்டியின் முடிவில் நீங்கள் செலுத்தியுள்ள மொத்த முதலீட்டு தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட அளவிலான வட்டி தொகையையும் பெறுவீர்கள். மறுபுறம் Annuity Deposit ஒரு முறை டெபாசிட்டை ஏற்று வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியில் அவருக்கு வட்டியுடன், சமமான மாதாந்திர தவணைகளில் டெபாசிட் தொகை திருப்பி செலுத்தப்படும்.

எஸ்பிஐ-யின் Annuity Deposit திட்டத்திற்கான வட்டி TDS-க்கு உட்பட்டது. இந்த திட்டம் சில சூழ்நிலைகளில் முதலீட்டு தொகை பேலன்ஸில் 75% வரை ஓவர் டிராஃப்ட் அல்லது கடனை அனுமதிக்கிறது.

பேமெண்ட் எப்போது தொடங்கும்.?

முதலீட்டாளர்கள் முதலீடு செய்த முதல் மாத முடிவில் (29, 30 அல்லது 31 தேதிகளில்) இல்லாவிட்டால், அடுத்த மாதத்தின் முதல் நாளில் வங்கியிடமிருந்து தொகையை திரும்ப பெற தொடங்குவார்கள். இந்த திட்டத்திற்கான டெபாசிட் பீரியட் 36/60/84 அல்லது 120 மாதங்களாக இருக்கிறது.

ப்ரீமெச்சூர் பேமென்ட் அனுமதிக்கப்படுகிறதா..?

ரூ.15,00,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு ப்ரீமெச்சூர் பேமெண்ட் செலுத்த அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அபராதக் கட்டணங்கள் பொருந்தும். டெபாசிட் செய்பவர் இறந்தால் எந்த வரம்பும் இல்லாமல் ப்ரீமெச்சூர் பேமென்ட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. Annuity Deposit-ல் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டம் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை வங்கியின் அதிகாரபூர்வ வெப்சைட்டிற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

First published:

Tags: Bank, Savings, SBI, SBI Bank