ஹோம் /நியூஸ் /வணிகம் /

மாதாந்திர வருமானம் வழங்கும் POMIS முதலீட்டுத் திட்டம் - முழு விவரம்

மாதாந்திர வருமானம் வழங்கும் POMIS முதலீட்டுத் திட்டம் - முழு விவரம்

POMIS முதலீட்டுத் திட்டம்

POMIS முதலீட்டுத் திட்டம்

ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதத்தை வழங்கும்இந்த POMIS திட்டத்தில் சிங்கிள் அக்கவுண்ட்டிற்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.4.5 லட்சமாகவும், ஜாயின்ட் அக்கவுண்டிற்கு ரூ.9 லட்சமாகவும் இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோவிட் தொற்றுக்கு பிறகு பலரும் ஹெல்த் இன்ஷுரன்ஸ், சேமிப்பு மற்றும் முதலீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முதலீடு செய்ய விரும்புவோர் ஆபத்தற்ற மற்றும் உத்தரவாத வருமானம் வழங்கும் ஆப்ஷன்களை தேடுகின்றனர்.

  ஆபத்தில்லா முதலீட்டு திட்டம் என்று வரும் போது ஃபிக்ஸட் டெப்பாசிட், பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட் மற்றும் போஸ்ட் ஆஃபிஸ் பிளான்கள் மீது மக்களின் கவனம் இருக்கிறது. இதில் போஸ்ட் ஆஃபிஸ்களில் வழங்கப்படும் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS - Post Office Monthly Income Scheme), முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாத திட்டமாக இருக்கிறது. மேலும் இந்த POMIS பிளான் பல ஆண்டுகளாக வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் விருப்பமான முதலீட்டுத் திட்டமாகவும் இருந்து வருகிறது. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோர், அந்தந்த பகுதியில் உள்ள எந்த தபால் நிலையத்திலும் முதலீடு செய்யலாம்.

  இந்த நம்பகமான அரசு திட்டமானது அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு நிலையான மாத வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மாதாந்திர வட்டி ஒவ்வொரு மாதமும் சந்தாதாரரின் சேமிப்பு வங்கி கணக்கில் வருமானமாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணையும் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான மாத வருமானம் இருப்பதால் மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது POMIS. மேலும் முதலீடு செய்யப்படும் தொகையானது அசல் தொகைக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இந்த அரசு திட்டத்தில் பாதுகாப்பாக இருக்கும். 5 வருட லாக்-இன் பீரியட்டுடன் வரும் இந்த அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) கீழ் முதலீடு செய்யப்படும் தொகையானது, திட்டத்தின் மெச்சூரிட்டி பீரியட்டிற்கு பிறகு சந்தாதாரருக்கு மீண்டும் (அசல் தொகை) திருப்பி தரப்படும்.

  ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதத்தை வழங்கும்இந்த POMIS திட்டத்தில் சிங்கிள் அக்கவுண்ட்டிற்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.4.5 லட்சமாகவும், ஜாயின்ட் அக்கவுண்டிற்கு ரூ.9 லட்சமாகவும் இருக்கிறது.

  Also Read : மாதம் ரூ.5100 முதலீடு செய்தால் ரூ.19 லட்சம் உங்களுக்கு சொந்தமாகும்.. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! 

   அக்கவுண்ட் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவுடன், சம்பந்தப்பட்ட போஸ்ட் ஆஃபிஸில் பாஸ்புக்குடன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து க்ளோஸ் செய்யலாம். ஒருவேளை மெச்சூரிட்டிக்கு முன் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்துவிட்டால்,அக்கவுண்ட் க்ளோஸ் செய்யப்பட்டு நாமினி/சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் முந்தைய மாதம் வரை வட்டி செலுத்தப்பட்டு தொகை திருப்பித் தரப்படும்.

  திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

  மெச்சூரிட்டி பீரியட்டிற்கு பிறகு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் பாதுகாப்பான முதலீடு திட்டமாக இருப்பதால் இதன் ஆபத்து நிலை கிட்டத்தட்ட 0% ஆகும்.
  5 வருட கட்டாய லாக்-இன் பீரியட்டுடன் வரும் இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் விரும்பினால் மெச்சூரிட்டி பீரியட்டிற்கு பிறகு மீண்டும் அதே திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
  முறையான வட்டி மற்றும் அடிக்கடி வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு இத்திட்டம் கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.
  டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் எந்த டெபாசிட்டையூம் திரும்ப பெற முடியாது.
  ஓராண்டுக்கு பின் முதலீட்டு பணத்தை லாக்-இன் பீரியட்டிற்கு முன் பெற விரும்பினால் குறிப்பிட்ட கட்டணம் செலுத்திய பிறகு முன்கூட்டியே திரும்ப பெறலாம்.
  அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் கொடுக்கப்பட துவங்கும் வட்டி மற்றும் மெச்சூரிட்டி வரை மாதாமாதம் செலுத்தப்படும்.
  அக்கவுண்ட் தொடங்கிய 12 மாதங்கள் - 36 மாதங்களுக்குள் முன்கூட்டியே பணம் எடுக்க 2% அபராதம் பொருந்தும். அக்கவுண்ட் தொடங்கிய 36 மாதங்கள் - 60 மாதங்களுக்குள் முன்கூட்டியே பணம் எடுக்க 1% அபராதம் பொருந்தும்.
  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Investment, National Pension Scheme, Post Office, Savings