எச்சரிக்கை..! பான் கார்டு பயனாளர்கள் இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம்

இரண்டு பான் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ .10,000 அபராதம் செலுத்தவேண்டி இருக்கும்  என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

எச்சரிக்கை..! பான் கார்டு பயனாளர்கள் இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம்
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 12, 2020, 3:50 PM IST
  • Share this:
நிரந்தர கணக்கு எண் (PAN) என்பது 10 எழுத்துக்கள் கொண்ட அடையாள அட்டையாகும். இது இந்திய வருமான வரித் துறையால் லேமினேட் செய்யப்பட்டு "கார்டு" வடிவத்தில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மக்களின் வருமானம் குறித்து அடையாளம் காண்பதற்கான முக்கியமான சான்றாக பான் கார்டு உள்ளது. மேலும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய பான் எண் அவசியமாகும்.

இந்த நிலையில் யாராவது இரண்டு பான் கார்டுகளைப் பெற்றால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்ற உத்தரவு அமலில் உள்ளது. எனவே உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்.உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால் அதில் ஒன்றை உடனடியாக செயலிழக்க செய்து விடுவது  சட்ட நடவடிக்கையில் சிக்காமல் தப்பிப்பதற்காக முக்கிய வழியாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டை இருந்தால் அவற்றை ஒப்படைப்பது எப்படி :


என்.எஸ்.டி.எல் (NSDS) வலைத்தளம் அல்லது வருமான வரி அலுவலகத்திற்கு நேராக செல்லலாம்.

இதற்கென ஒரு படிவம் வழங்கப்படும். இந்த படிவத்தில் நீங்கள் தொடர விரும்பும் பான் எண்ணை குறிப்பிட்டு, மீதமுள்ள பான் தகவலை பார்ம் எண் 11 படிவத்தில் நிரப்பவும். இது தவிர படிவத்துடன் ரத்து செய்யப்பட வேண்டிய பான் கார்டை நகலெடுத்து இணைக்கவும்.

சிலர் வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு பான் கார்ட் வைத்திருக்கிறார்கள். டிமேட் கணக்கிற்கு, வருமான வரி செலுத்த மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு என தனித்தனி பான் கார்டை வைத்துள்ளனர்.இது தவிர சிலர் பழைய பான் தொலைந்த பிறகு புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களிடம் பல பான் கார்டுகள் உள்ளது.

டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருந்தால், ஒரு பான் கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவேண்டும். இரண்டாவது பான் கார்டை சமர்ப்பித்த பின்னர் உங்கள் அசல் பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்புங்கள்.

Also Read : வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்றால் என்ன நடக்கும்?

அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் ஒரு உலகளாவிய அடையாளத்தைக் கொண்டு வருவதும், பண பரிவர்த்தனைகளை கண்காணிப்பதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுப்பதும், குறிப்பாக பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய அதிக நிகர மதிப்புள்ள நபர்களின் தகவலை பெறுவதே பான் கார்டு கொண்டு வந்ததற்கான முக்கிய நோக்கம் ஆகும்.

பரிந்துரைக்கப்பட்ட பான் விண்ணப்பத்தை மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட பான் ஏஜென்சிக்கு சமர்ப்பிப்பதன் மூலமாகவோ அல்லது என்.எஸ்.டி.எல் வலைத்தளம், யு.டி.ஐ.க்கு ஆன்லைனில் சமர்ப்பிப்பதன் மூலமாகவோ பான் கார்டிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே வாங்கிய அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில்  இரண்டு பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள், பிறந்த தேதி மற்றும் முகவரி கொண்ட ஐடி, பழைய பான் கார்டின் நகல், மற்றும் கட்டணம் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். புதிய திருத்தும் செய்யப்பட்ட அட்டையைப் பெற சுமார் 10–15 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading