• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஸ்மார்ட்போனைவிட லேப்டாப், கணினி சிறந்தது..!

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஸ்மார்ட்போனைவிட லேப்டாப், கணினி சிறந்தது..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

'பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். ’

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஸ்மார்ட்போனைவிட லேப்டாப் அல்லது கணினி சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    ஸ்கிரீன் சைஸ் மற்றும் முழுமையான தகவல்களை ஆன்லைன் ஷாப்பிங்-ன் போது பெற ஸ்மார்ட்போனை விட லேப்டாப் அல்லது கணினி சிறந்தது என ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து ஆய்வை இஸ்ரேலைச் சேர்ந்த பென் குரியன் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.

    ஆய்வாளர் லியோர் ஃபின்க் கூறுகையில், “ஸ்கிரீன் சைஸ் மட்டுமல்லாது வேறொரு பயனும் இருக்கிறது. பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதில் போதிய விவரங்கள் வழங்கப்பட்டிருக்காது.

    இதே தளத்தை நீங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பார்த்தால் அதிகப்படியாகவே கொடுக்கப்பட்டிருக்கும். இது வாங்குவோருக்குப் பெரும் பலனைத் தரும்” என்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அடோப் ஆய்வில், ஸ்மார்ட்போன்களில் 47 சதவிகித ட்ராஃபிக் ஆன்லைன் ஸ்டோர்களுக்கு வருகிறதாம்.

    இதன் மூலம் ஆன்லைன் தளங்களுக்கு 36 சதவிகித விற்பனையும் நடக்கிறதாம். ஸ்மார்ட்போனில் இல்லாமல் லேப்டாப் அல்லது கணினியில் ஷாப்பிங் செய்வோர் நல்ல முடிவுகளை எடுத்து சிறந்த பொருட்களையே தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

    மேலும் பார்க்க: டிவி, ஏர்கூலர், சார்ஜிங் வசதி, வாஷ்பேசின்... மினி வீடாகவே மாறிய ஆட்டோ..!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: