தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு குளிர்காலம் படு மோசமாக இருக்கிறது. தற்போதைய பொருளாதார மந்தநிலை, வருவாய் லாபம் இல்லாமை, செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு எனும் ஆயுதத்தை கையில் எடுத்து வருகின்றனர்.
ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் வீழ்ச்சியடைந்த வருவாயை மீட்டெடுக்கவும், பட்ஜெட் செலவினங்களை மறுகட்டமைக்கவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.
எலோன் மஸ்க் ட்விட்டரின் ஆட்சியைப் பெற்றவுடன் கிட்டத்தட்ட 50 சதவீத ஊழியர்களை வெளியேற்றிய அதே வேளையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும் மெட்டாவில் சுமார் 13,000 ஊழியர்களை தளங்களில் குறைத்தார். மிக சமீபத்தில், அமேசான் சுமார் 10,000 ஊழியர்களின் பணிநீக்கத்தை அறிவித்தது.
இதையும் படிங்க:"நாங்க வேலைய விட்டு அனுப்பல, அவங்கதான் விருப்பி வெளிய போனாங்க - ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து அமேசான் விளக்கம்!
இப்படிப்பட்ட சூழலிலும் ஒரு தென்றல் வீசதான் செய்கிறது என்பதுபோல, பெரிய நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆட்களுக்கு ஒரு நிறுவனம் 1 மில்லியன் (சுமார் ரூ. 81 லட்சம்) கொடுத்து வேலையில் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறதாம்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘டே ஒன் வென்ச்சர்’ நிறுவனம், தற்போது நடைபெற்று வரும் ஆட்குறைப்புகளில் வேலையை இழந்த ஊழியர்களுக்காக தனி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. சமீபத்திய பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தலைமையிலான 20 புதிய ஸ்டார்ட்அப் குழுக்களுக்கு இந்நிறுவனம் ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 81 லட்சம்) நிதியுதவி வழங்க உள்ளதாம்.
இதையும் படிங்க : ட்விட்டரில் இருந்து வெளியேறியவரா நீங்க...வாங்க வேலை இங்க தரோம்... "கூ"வின் புது யுக்தி!
மொத்தத்தில், நிறுவனம் ட்விட்டர், அமேசான், ஃபேஸ்புக் மற்றும் பிற நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனர்களுக்கு ஆதரவாக அதன் $52.5 மில்லியன் நிதியிலிருந்து $5 மில்லியன் - சுமார் ரூ.40 கோடி (அதிகபட்சம் $10 மில்லியன்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணிபுரிந்தவர்கள். ஆனால் பணிநீக்கம் காரணமாக வேலையை விட்டுவிட்டவர்கள் அல்லது தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்புபவர்களுக்காக இந்த நிதியுதவியை இந்த நிறுவனம் வழங்குகிறது.
டே ஒன் வென்ச்சர் தவிர, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வாய்ப்புகளை வழங்க பல நிறுவனங்கள் உள்ளன. பல நிறுவனங்களில் மூத்த நிர்வாகிகள் வேலை வாய்ப்புகள் வழங்க தயாராக உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.