Home /News /business /

ஆரோக்கியமான நிதி வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை இதோ!

ஆரோக்கியமான நிதி வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை இதோ!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Saving Tips | தங்கள் பணத்தை பொறுப்பற்ற முறையில் கையாளுவோர் தங்கள் கடன்களை மற்றும் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். ஆரோக்கியமான நிதி வாழ்க்கைக்கு உதவும் சில முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாம் நம்முடைய பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறோம் மற்றும் அதை வைத்து எதிர்காலத்திற்காக எப்படி திட்டமிடுகிறோம் என்பது மிக முக்கியமானது. நம்முடைய நிதி முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் நம் நிதி ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் கூட சில நேரங்களில் தங்களது தனிப்பட்ட நிதி விஷயத்தில் தடுமாறுவார்கள்.

    உடல் அல்லது மன ஆரோக்கியத்தைப் போலவே நிதி ஆரோக்கியமும் ஒருவருக்கு மிகவும் அவசியம். தங்கள் பணத்தை பொறுப்பற்ற முறையில் கையாளுவோர் தங்கள் கடன்களை மற்றும் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். ஆரோக்கியமான நிதி வாழ்க்கைக்கு உதவும் சில முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்.

    குறைவான கடன்களை வைத்திருங்கள்:

    நிதி இலக்கு என்பது உங்கள் பணத்தை நிர்வகிப்பதற்கான இலக்காகும். இது சேமிப்பு, செலவு, சம்பாதிப்பது அல்லது முதலீடு செய்வது போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம். இப்படிப்பட்ட உங்கள் நிதி இலக்குகளுக்கு இடையூறு விளைவிக்காமல் பணத்தை திருப்பிச் செலுத்த முடியும் போது கடன் வாங்குங்கள். அதுவே புத்திசாலித்தனம். அவசிய மற்றும் அவசர காரணங்களை தவிர வேறு விஷயங்களுக்கு கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். அத்தியாவசியங்களுக்கு மட்டுமே கடன் வாங்கும் பழக்கம் உங்கள் வருமானத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்க சுதந்திரம் அளிக்கிறது. உங்கள் நிதி பலத்தை அதிகரிக்கிறது.

    Read More : எல்ஐசி-யில் தினசரி ரூ.29 முதலீடு செய்து ரூ.4 லட்சம் பெறுங்கள் - விவரங்கள் இதோ!


    முதலீடுகளில் கவனம்:

    நிதி ரீதியாக தொடர்ந்து வளர விரும்பினால், பணவீக்கத்தை முறியடிப்பதன் மூலம் செல்வத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வருமானம் பெற திட்டமிடும் அதே நேரத்தில் உங்களுக்கு பொருத்தமான முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யது அதில் முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    அதே போல நீங்கள் செய்யும் முதலீடு நடைமுறையில் உள்ள பணவீக்க விகிதத்தை விட அதிக வருவாயை உங்களுக்கு தருவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் நிதி ரீதியாக ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்.

    சரியான நேரத்தில் கடன்களை திருப்பி செலுத்துங்கள்:

    நீங்கள் வாங்கி இருக்கும் கடன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முக்கியத்துவம் கொடுங்கள். EMI-க்களை சரியான நேரத்தில் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்கும். கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்படும் தாமதம் கிரெடிட் ஸ்கோரில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம்.

    மேலும் நீங்கள் செலுத்தும் அபராதம் உங்கள் நிதி இலக்குகளில் இடையூறு ஏற்ப்டுத்தலாம். அதிக கிரெடிட் ஸ்கோர் உங்கள் நிதி வளர்ச்சி மற்றும் வேறு புதிய கடனுக்குக்கான தகுதியை பெற உதவும்.

    நிதி இலக்குகளை திட்டமிடுங்கள்:

    ஆரோக்கியமான வாழ்க்கையை நிதி ரீதியாக பெற நீங்கள் விரும்பினால், அதற்கு கட்டாயம் நிதி இலக்குகளை நீங்கள் திட்டமிட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் திட்டமிடும் நிதி இலக்கு தேவைகளில் இருந்து பின்வாங்காதீர்கள்.

    ஒரு நிதி இலக்கை கொண்டிருப்பது உங்கள் பணத்தை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றும். அர்த்தமுள்ள நிதி இலக்குகளைக் கொண்டிருப்பது கடனற்ற வாழ்க்கைக்கான பாதையில் உங்களை அழைத்து செல்லும் மற்றும் நிதி சுதந்திரத்தை உங்களுக்கு அளிக்கிறது.

    அவசர நிதியை பராமரியுங்கள்:

    தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப போதுமான பணம் மற்றும் சேமிப்புகள் உங்களிடம் இருந்தாலும் திடீரென்று ஏற்படும் அனைத்து வகை நிதி அவசர நிலைகளையும் சமாளிக்க அவசர நிதியை கொண்டிருப்பது முக்கியம். எதிர்காலத்தில் தேவைப்படும் அனைத்து நிதி தேவைகளையும் நிவர்த்தி செய்ய போதுமான அவசர நிதியை உருவாக்கி, அந்த நிதியின் அளவை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது முக்கியம்.

    உயில் மற்றும் போதுமான காப்பீடு:

    கடன் மற்றும் சர்ச்சை இல்லாத சொத்துக்களை குடும்பத்தினருக்கு விட்டு செல்வதில் தான் ஒருவரது சிறப்பான வாழ்வு அடங்கி இருக்கிறது. உங்கள் சொத்துக்களின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய தெளிவான உயிலை உருவாக்க வேண்டும். பெரிய கடன்களை விட்டுச் சென்றால் உங்களைச் சார்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல் இருக்க, ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை எடுப்பது சிறந்தது.

    உடல்நலக் காப்பீடு என்பது நிதி ரீதியாக உங்களை பாதுகாக்கும். போதுமான அளவிலான உடல்நலக் காப்பீடு எடுப்பதன் மூலம் நீங்கள் எளிதாக உடல்நல அபாயங்களை தடுக்கலாம்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Business, Financial crisis, Money

    அடுத்த செய்தி