ஹோம் /நியூஸ் /வணிகம் /

போஸ்ட் ஆபிசில் சூப்பரான சேமிப்பு திட்டம்! வட்டி விகிதங்கள் உயர்வு; குஷியில் முதலீட்டாளர்கள்!

போஸ்ட் ஆபிசில் சூப்பரான சேமிப்பு திட்டம்! வட்டி விகிதங்கள் உயர்வு; குஷியில் முதலீட்டாளர்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

கிராமம் முதல் நகரம் வரை அனைத்துத்தரப்பட்ட மக்களிடம் தங்களுடைய சேமிப்புத்திட்டங்கள் மற்றும் அதன் வட்டி விகிதங்களை இதன் ஊழியர்கள் கொண்டு சேர்ப்பதால் தான் நிறைய மக்கள் தற்போது பயன்பெற்று வருகிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இன்றைக்கு உள்ள பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், எதிர்காலத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்க நினைக்கும் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான முதலீட்டைத் தான் விரும்புவார்கள். இதில் முக்கியமானது தபால் நிலையங்களில் இயங்கி வரும் சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்வது தான்.

  கிராமம் முதல் நகரம் வரை அனைத்துத்தரப்பட்ட மக்களிடம் தங்களுடைய சேமிப்புத்திட்டங்கள் மற்றும் அதன் வட்டி விகிதங்களை இதன் ஊழியர்கள் கொண்டு சேர்ப்பதால் தான் நிறைய மக்கள் தற்போது பயன்பெற்று வருகிறார்கள். இதோடு இவர்களுக்காகவே பல சேமிப்புத் திட்டங்களும் தற்போது நடைமுறையில் உள்ளது.

  இந்நிலையில், கடந்த 2021- 2022 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதோடு சிலவற்றில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. இதோடு இந்த நடைமுறை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

  இந்நிலையில் தான் ஏற்கனவே வருமான வரிச் சலுகை அளிக்காத சிறு சேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியுள்ளது.

  எனவே இந்நேரத்தில் என்னென்ன சிறு சேமிப்புத்திட்டங்கள்? மற்றும் எவ்வளவு வட்டி விகிதம் உயர்ந்துள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  அஞ்சலக சேமிப்புத்திட்டத்திற்கான வட்டி உயர்வு?

  போஸ்ட் ஆபிஸ் 2 ஆண்டு கால வைப்பு (2 year deposit scheme): தபால் நிலையத்தில் 2 ஆண்டு கால வைப்பு அதாவது 2 year deposit scheme ன் கீழ் முதலீட்டிற்கு 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் படி 5.5 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதம் தற்போது 5.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  2 ஆண்டு கால டெபாசிட் (Post Office 2-year time deposit): மத்திய அரசின் அறிவிப்பின் படி, இத்திட்டங்களுக்கான முதலீடு தற்போது 30 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன்படி 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக வட்டி விகிதம் உயர்ந்துள்ளது

  மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: முதியவர்களின் முதலீட்டுத் திட்டங்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படக்கூடியது தான் தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம். தற்போது மத்திய அரசின் அறிவிப்பின் படி, இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமா உயர்ந்துள்ளது. அதாவது 20 அடிப்படைப் புள்ளிகள் கூடுதலாக வட்டி விகிதங்களைப் பெற முடியும்.

  கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி): சமீபத்தில் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கான முதிர்வு காலத்தையும் அரசாங்கம் திருத்தியுள்ளது. இந்த திருத்தத்திற்குப் பிறகு, முதிர்வு காலம் மற்றும் வட்டி விகிதம் 7 சதவீதம் மற்றும் 123 மாதங்கள் ஆக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 6.9 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) : தபால் அலுவலக மாதாந்திர வருமானத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

  Read more: விரைவில் டிஜிட்டல் கரன்சி... ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  இருந்தப் போதும், சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya samrithi yojana- SSY), பொது வருங்கால வைப்பு நிதி (Public provident Fund- PPF) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகியவற்றின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Interest, Interest rate, Post Office, Savings