பழைய 1, 2, 5 ரூபாய் நோட்டு இருக்கா பாஸ்.. பல லட்சங்களை சம்பாதிக்கலாம்..

5 ரூபாய் நோட்டு

வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து 1.5 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.

  • Share this:
    பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கா.. அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான்.

    பழைய 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் ரூ1, ரூ2, ரூ5 நோட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதிலும் சில அபூர்வமான பழைய நோட்டுகள், நாணயங்கள் உங்களிடம் இருந்தால் வீட்டில் இருந்தபடியே சில லட்சங்களை அள்ளலாம்.

    சுதந்திரத்திற்கு முன்னர் அச்சிடப்பட்ட 1ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ 2 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதில் விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டிருக்கும். 1918-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசர் கிங் ஜார்ஜ் படத்துடன் கூடிய 1 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    உங்களிடம் பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்து ரூ.30,000 வரையில் சம்பாதிக்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ரூபாய் நோட்டில் டிராக்டர் படம் இருக்க வேண்டும். அதேபோல, இதில் 786 என்ற சீரியல் நம்பர் இருக்க வேண்டும்.

    உங்களிடம் 1977- 1979 காலக்கட்டத்தில் அச்சடிக்கப்பட்ட 1 ரூபாய் பணம் இருந்தால் நீங்கள் 45000 வரை சம்பாதிக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து 1.5 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.

    CoinBazzar தளத்தில் அதனை விற்க, முதலில் ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தைக் கிளிக் செய்து தளத்தில் பதிவேற்றவும். இதற்குப் பிறகு, உங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும். வலைத்தளம் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்து பதிவு செய்யவும்.

    இதன்பின்னர் இந்த பழைய நாணயங்களை வாங்குபவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். உங்களுக்கு அதிர்ஷடம் அடித்தால் லட்சங்களுக்கு விற்கலாம். அந்த வலைதளத்தின், கட்டணம் மற்றும் விற்பனை விதிமுறைகளின்படி நீங்கள் உங்கள் நாணயத்தை விற்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: