Home /News /business /

ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு மத்தியில் உங்கள் பங்குசந்தை முதலீடுகளை பாதுகாப்பது எப்படி?

ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு மத்தியில் உங்கள் பங்குசந்தை முதலீடுகளை பாதுகாப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளீர்களா.? அப்படி என்றால் ஒரு முதலீட்டாளராக இந்த சரிவின் போது உங்கள் போர்ட்ஃபோலியோவை பாதுகாக்க ஆர்வமாக இருப்பீர்கள்.

  உக்ரைன் நாட்டின் ராணுவத் தளவாடங்கள் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளிடையே வெடித்துள்ள மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது. கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. உக்ரைனின் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா விளக்கமளித்துள்ள நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடரும் என்றே தோன்றுகிறது.

  இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா தாக்கல் நடத்த துவங்கிய செய்தி வெளியானதுமே ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் கடுமையாக சரிந்தன, முக்கிய குறியீடுகள் 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை இழந்தன. இப்போது வர்த்தகம் செய்யப்படும் டவ் மற்றும் எஸ்&பி ஃபியூச்சர் கான்ட்ராக்ட்ஸ் 2 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளன.

  நிலவரப்படி S&P-யின் சென்செக்ஸ் காலையில் கிட்டத்தட்ட 1,800 புள்ளிகள் சரிந்தது. பல மாதங்களுக்கு பிறகு பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கமாக மாறியுள்ளன. நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளீர்களா.? அப்படி என்றால் ஒரு முதலீட்டாளராக இந்த சரிவின் போது உங்கள் போர்ட்ஃபோலியோவை பாதுகாக்க ஆர்வமாக இருப்பீர்கள். இது போன்ற கடினமான சூழலில் உங்கள் முதலீடுகளை பாதுகாக்க உதவும் சில வழிகள் உள்ளன.

  முறையான முதலீட்டுத் திட்டங்களை (SIP) நிறுத்தாதீர்கள்:

  பங்கு சந்தைகள் நிலையற்றதாக மாறும் நேரங்களில் உங்கள் முறையான முதலீட்டுத் திட்டங்களை (systematic investment plans- SIP) நிறுத்தாதீர்கள். IDFC மியூச்சுவல் ஃபண்ட் மேற்கொண்ட ஆய்வில், கோவிட் காரணமாக மார்ச் 2020-ல் ஏற்பட்ட ஸ்டாக் மார்க்கெட் சரிவைத் தொடர்ந்து பீதியில் பலர் முன்கூட்டியே விலகினர். ஆனால் விலகாமல் 2 அல்லது 3 வருடங்கள் தொடர்ந்திருந்தால், அவர்கள் அதிகம் பயனடைந்திருப்பார்கள் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பேசிய ஒரு நிதி மேலாளர் “2-3 சதவிகித வீழ்ச்சி உங்கள் முறையான முதலீட்டுத் திட்டங்களை நிறுத்தத் தூண்ட கூடாது. இந்த நிதியாண்டில் இன்னும் சில நாட்கள் பெரிய சரிவைக் காண்போம். மனதளவில் தயாராக இருங்கள். SIP-க்களை தொடருங்கள்" என்கிறார்.

  முதலீடு செய்யுங்கள் ஆனால் ஊகிக்க வேண்டாம்..

  முதலீட்டாளர்கள் தங்கள் ஒட்டுமொத்த நேரடி ஈக்விட்டி போர்ட்ஃபோலியோக்களின் செயல்திறனை பொருத்தமான அளவுகோல்களுடன் ஒப்பிட வேண்டும். அதே சமயம் சிறப்பாக செயல்பட்ட தனிப்பட்ட பங்குகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். அடிப்படை வணிகத்துடன் தொடர்புடைய ரிஸ்க் ரிவார்டைப் புரிந்துகொண்ட பிறகு ஒரு பங்கை வாங்குவது ஒரு நல்ல தொடக்கமாகும், மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை அதிகம் வாங்குவது நல்ல பலனளிக்கும். இருப்பினும் விரைவான லாபம் ஈட்டலாம் என்ற ஊகித்து நம்பிக்கையில் டிப்ஸ்களில் பங்குகளை வாங்குவது எதிர் விளைவுகளை ஏற்படுத்த கூடும்.

  தெமாட்டிக் இன்வெஸ்ட்டிங் (thematic investing):

  Thematic investing என்பது முதலீட்டின் ஒரு வடிவமாகும். இது மேக்ரோ-லெவல் ட்ரெண்ட்ஸ்களை கண்டறிவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது குறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது துறைகளை காட்டிலும் கணிக்கப்பட்ட நீண்ட காலப் ட்ரெண்ட்ஸ்களில் கவனம் செலுத்தும் ஒரு அணுகுமுறையாகும். கடந்த 2 ஆண்டுகளில், பல thematic ஃபன்ட்ஸ் தொடங்கப்பட்டன மற்றும் முதலீட்டாளர்களும் எதிர்பார்த்த சிறந்த வருமானத்தை பெற்றனர். எனினும் இதில் பெரும்பாலானவை அதிக ஆபத்துகளுடன் வருகின்றன. ஆனால் PSU equity funds, financials and infrastructure போன்ற சில வாய்ப்புகள் உள்ளன. பரிசோதனை முறையில் தெமாட்டிக் இன்வெஸ்ட்டிங்கில் ஈடுபடலாம். ஆனால் உங்கள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் 10 சதவீதத்திற்கு மேல் இந்த வகையிலான முதலீடுகளில் செலுத்த வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

  பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி ஃபண்ட் (Diversified Equity):

  பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி ஃபண்ட் என்பது அளவு மற்றும் துறையைப் பொருட்படுத்தாமல் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் பங்கு சந்தை முழுவதும் முதலீடுகளை பன்முகப்படுத்துகிறது. மேலும் பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி நிதிகள், நிதி மேலாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை வணிக அடிப்படைகள் மற்றும் மதிப்பீடுகளை மாற்றியமைக்க அனுமதிக்கின்றன. ஒரு நிலையற்ற நாளில் முதலீடு செய்வது, ஒரு நாள் முன்பு இருந்ததை விட நீங்கள் குறைந்த விலையில் பங்குகளை வாங்கலாம் என்பதால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கலாம். ஆனால் பங்குகள் மேலும் விலை குறையாமல் இருக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. எனவே சில்லறை முதலீட்டாளர்கள் flexicap funds அல்லது multi-cap funds-ற்கு செல்லுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

  தொடங்கியது போர் : உக்ரைனில் இருக்கும் இந்தியர்களின் நிலை என்ன?

  தங்கத்தில் முதலீடு:

  தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு மற்றும் இதற்கு ஐந்து முதல் ஏழு சதவிகிதம் வரை ஒதுக்கீடு செய்வது பாதக விளைவை கட்டுப்படுத்த உதவும் என்கிறார்கள் நிபுணர்கள். அண்மைக் காலத்தில் ஒரு அசட் எவ்வாறு செயல்பட்டது என்பதை அடிப்படையாக கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். ஏனென்றால் சமீப காலமாக தங்கம் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த ஓராண்டில் 1.22 சதவீத வருமானத்தை மட்டுமே அளித்துள்ளது. ஆனாலும் தங்கத்தை தவிர்க்க வேண்டாம் என்பதே நிபுணர்களின் அறிவுரை.
  Published by:Karthick S
  First published:

  Tags: Russia - Ukraine, Stock market

  அடுத்த செய்தி