முகப்பு /செய்தி /வணிகம் / 1 வருட நிலையான வைப்புநிதிகளுக்கு 6.50% வரை வட்டி வழங்கும் தனியார் வங்கிகளின் பட்டியல்!

1 வருட நிலையான வைப்புநிதிகளுக்கு 6.50% வரை வட்டி வழங்கும் தனியார் வங்கிகளின் பட்டியல்!

பணம் - மாதிரிப்படம்

பணம் - மாதிரிப்படம்

ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஒரு வருட கால வைப்பு நிதிகளுக்கு 6.35% வட்டி வழங்குகிறது.

  • Last Updated :

நிலையான வைப்பு நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன்பு, அதன் ஆபத்துகள் பற்றி மதிப்பீடு செய்தபின் முதலீடு செய்யுங்கள்.

அவசர கால நிதித் தேவைகளுக்கு, நீங்கள் ஈட்டும் பணத்தில், ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அதே போல, உங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை லிக்விட் அசெட்ஸ் எனப்படும் திரவ சொத்துகளாக முதலீடு செய்ய வேண்டும். திரவ சொத்துகள் என்பது, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பணமாக மாற்றிக் கொள்ளக் கூடிய சொத்துகள் ஆகும். உங்கள் முதலீடு போர்ட்ஃபோலியோவில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நிலையான வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும். ஓராண்டு கால வைப்புநிதி உங்களுக்கு கணிசமான வருவாயை ஈட்டும்.

பெரிய, முதன்மையாக இயங்கி வரும் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும் போது, சிறிய ஃபைனான்ஸ் நிறுவனங்களும், சிறிய தனியார் வங்கிகளும் வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து, அதிக நிதிகளை தங்கள் வங்களில் டெபாசிட் செய்ய வைப்பதே இதன் நோக்கஸ

வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், தனியார் வங்கிகளும், சிறிய நிதி நிறுவனங்களும் ஓராண்டு கால வைப்பு நிதிகளுக்கு 6.5% வட்டியை வழங்குகிறது.

சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஒரு வருட கால வைப்பு நிதிகளுக்கு 6.5% வட்டி வழங்குகிறது. மற்ற சிறிய அளவில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களோடு ஒப்பிடும் பொது, சூர்யோதை சிறு நிதி வங்கி, அதிக அளவு வட்டியை வழங்குகிறது. நீங்கள் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தினால், ஆண்டு முடிவில், உங்களுக்கு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் கிடைக்கும்.

ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஒரு வருட கால வைப்பு நிதிகளுக்கு 6.35% வட்டி வழங்குகிறது. நீங்கள் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தினால், ஆண்டு முடிவில், உங்களுக்கு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் கிடைக்கும்.

Also read... ரிசர்வ் வங்கியின் மைக்ரோ பைனான்ஸ் கடன் திட்ட புதிய பரிந்துரைகள்: ஏழைகளுக்கு சாதகமா பாதகமா?

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு நிதி நிறுவனங்கள் தவிர்த்து, தனியார் வங்கிகளும் கணிசமான வட்டியை வழங்குகிறது. அவற்றில் மூன்று வங்கிகள் வைப்புநிதியின் மீது 6% வட்டியை வழங்குகிறது.

இண்டஸ் இண்ட் வங்கி, ஒரு வருட கால வைப்பு நிதிகளுக்கு 6% வட்டி வழங்குகிறது. ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தினால், ஆண்டு முடிவில், உங்களுக்கு ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய் கிடைக்கும்.

RBL வங்கியும், இண்டஸ் இண்ட் வங்கி போலவே, ஒரு வருட கால வைப்பு நிதிகளுக்கு 6% வட்டி வழங்குகிறது. ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தினால், ஆண்டு முடிவில், உங்களுக்கு ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய் கிடைக்கும்.

top videos

    உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஒரு வருட கால வைப்பு நிதிகளுக்கு 6% வட்டி வழங்குகிறது. ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தினால், ஆண்டு முடிவில், உங்களுக்கு ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய் கிடைக்கும்.

    First published:

    Tags: Personal Finance