• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 5 ஆண்டுக்கான வரி சேமிப்பு எஃப்டி-களில் சிறந்த விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல் வெளியீடு!

5 ஆண்டுக்கான வரி சேமிப்பு எஃப்டி-களில் சிறந்த விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல் வெளியீடு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

டாக்ஸ் சேவிங்ஸ் பிக்சட் டெபாசிட் (Tax saving fixed deposit) ஐந்து வருட டெபாசிட் காலத்துடன் வருகின்றன. இந்த காலத்திற்கு இடையில் நீங்கள் டெபாசிட் செய்து வைத்த பணத்தை எடுக்க முடியாது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) என்பது இந்தியர்கள் சேமிப்பதற்கு மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80 சி-ன் கீழ் வரி சேமிப்பு நோக்கத்திற்காகவே, பிபிஎஃப் (PPF), ஈஎல்எஸ்எஸ் (ELSS), யுலிப் (ULIP), என்.பி.எஸ் (NPS) போன்ற பிற கருவிகளைக் காட்டிலும் வரி சேமிப்பு பிக்சட் டெபொசிட்டுகளை பலர் விரும்புகிறார்கள். 

ஏனெனில் அவை வசதி மற்றும் உத்தரவாத வருமானத்தை ஒருவருக்கு வழங்குகிறது. வரி சேமிப்பு எஃப்.டி.களில் ஒரு நிதியாண்டில் சுமார் ரூ.1,50,000 வரை சேமிக்க முடியும். மேலும் முக்கியமாக, வரி சேமிப்பு எஃப்.டி.க்கள் பல்வேறு எண்ணிக்கையில் சாதாரண எஃப்.டி.களிலிருந்து வேறுபடுகின்றன. மேலும், வரி சேமிப்பு எஃப்.டி.க்களை பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1) டாக்ஸ் சேவிங்ஸ் பிக்சட் டெபாசிட் (Tax saving fixed deposit) ஐந்து வருட டெபாசிட் காலத்துடன் வருகின்றன. இந்த காலத்திற்கு இடையில் நீங்கள் டெபாசிட் செய்து வைத்த பணத்தை எடுக்க முடியாது.

2) ரெசிடெண்ட் நபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (Hindu Undivided Families) மட்டுமே இந்த டெபாசிட் கணக்குகளை திறக்க முடியும்.

3) வரி சேமிப்பு எஃப்.டி.க்களை ஒற்றை அல்லது கூட்டு பெயர்களில் அதாவது ஜாயிண்ட் பெயர்களில் திறக்கலாம். ஒருவேளை கூட்டு கணக்கு வைத்திருந்தால், பிரிவு 80C விதியின்படி முதல் உரிமையாளர் மட்டுமே வரி சலுகையைப் பெற முடியும்.

4) இந்த FD களில் ஒருவர் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர வட்டி பெறும் விருப்பத்தை தேர்வு செய்யலாம். சம்பாதித்த வட்டியை மீண்டும் முதலீடு செய்யும் கூட்டு விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

5) வரி சேமிப்பு எஃப்டி-களில் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். வட்டித் தொகை உங்கள் வருடாந்திர வருமானத்தில் சேர்க்கப்படும். மேலும் உங்கள் வருமான வரி விதியின் படி வரி விதிக்கப்படும். அதில் செலுத்த வேண்டிய வட்டி காலாண்டு அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

6) இந்த எஃப்.டி.களில் சம்பாதிக்கும் வருடாந்திர வட்டிக்கு வங்கிகள் 10% என்ற விகிதத்தில் டி.டி.எஸ் கழிக்கின்றன. ஒருவேளை நீங்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றிருந்தால், நிதியாண்டின் தொடக்கத்தில் 15G/H படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளன.

7) கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளைத் தவிர வேறு எந்த பொது அல்லது தனியார் துறை வங்கிகளிலும் வரி சேமிப்பு எஃப்.டி. கணக்குகளை திறக்கலாம்.

8) இது தவிர, 5 ஆண்டு தபால் அலுவலக கால வைப்புத்தொகை பிரிவு 80 சி இன் கீழ் விலக்குக்கு தகுதி பெறுகிறது.

9) நீங்கள் முன்கூட்டியே திரும்பப் பெறவோ அல்லது வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கடன் எடுக்கவோ முடியாது.

10) இந்த டெபொசிகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகின்றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற பெரிய வங்கிகள் வரி சேமிப்பு டெபொசிகளில் மிகக் குறைந்த விகிதத்தை வழங்குகின்றன. சில சிறிய தனியார் துறை வங்கிகள் இந்த டெபாசிட்களில் கவர்ச்சிகரமான விகிதங்களை வழங்குகின்றன.

Also read... Gold Rate: தொடர் உயர்விற்கு இடையே குறைந்தது தங்கத்தின் விலை... மாலை நிலவரம் என்ன?

மூத்தவர்கள் அல்லாத குடிமக்களுக்கு 5 ஆண்டு வரி சேமிப்பு டெபாசிட்களில் சிறந்த கட்டணங்களை வழங்கும் வங்கிகள்:

* டிசிபி வங்கி (DCB Bank) - 6.75%

* யெஸ் வங்கி (Yes Bank) - 6.75%

* ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank) - 6.75%

* இண்டஸ்இன்ட் வங்கி (Indusind Bank) - 6.50%

* AU சிறு நிதி வங்கி (AU Small Finance Bank) - 6.5%

* ஆர்.பி.எல் வங்கி (RBL Bank) - 6.40%



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: